வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

7 முறை கட்டாய கருக்கலைப்பு, புது குண்டை போட்ட விஜயலட்சுமி.. சீமான் சிக்குவாரா.? கடைசியாக எடுத்த அஸ்திரம்

Vijayalakshmi-Seeman: அண்மை காலமாகவே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது சீமான், விஜயலட்சுமி விவகாரம் தான். இது குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் உலா வரும் நிலையில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்ற விவாதங்களும் எழுந்து வருகிறது.

அதில் விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாகவும், 7 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அவரிடம் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையும் நடைபெற்றது.

Also read: விஜயலட்சுமி டேட்டிங் உறவில் இருந்த 4 பிரபலங்கள்.. அப்ராணிக்கு அப்ராணியா இருந்த பிரெண்ட்ஸ் அமுதா

அதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவர் பல ஆதாரங்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற ஒரு பதட்ட நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் விஜயலட்சுமிக்கு இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்திருக்கிறது.

அதன் முடிவில் என்ன நடக்கும் என்பதை தான் தற்போது மீடியாக்கள் உற்று நோக்கி வருகின்றன. ஏற்கனவே இந்த விவகாரத்தில் சீமான் விஜயலட்சுமியை ரொம்பவும் தரக்குறைவாக பேசி இருந்தார். மானங்கெட்ட ஒருத்தியோடு சண்டையிட முடியாது என்று மோசமாகவும் விமர்சித்திருந்தார்.

Also read: ஈகோ காரணமாக சண்டை போட்ட 5 நட்சத்திரங்கள்.. சீமான் விஜயலட்சுமிக்கு முன்னாடி ஜோ போட்ட சண்டை

அதைத்தொடர்ந்து விஜயலட்சுமி ஒவ்வொரு புகாராக அடுக்கி வந்த நிலையில் இன்று நடந்துள்ள மருத்துவ பரிசோதனை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சீமானுக்கு இந்த விவகாரத்தினால் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இனிமேல் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என கடைசி அஸ்திவாரத்தை விஜயலட்சுமி இறக்கி இருக்கிறார். இப்படி சூடு பிடித்துள்ள இந்த விவகாரத்தில் சீமான் ஆதாரத்தோடு சிக்குவாரா அல்லது தன்னை நிரூபிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: 5 பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய சீமான்.. பகீர் கிளப்பி இருக்கும் விஜயலட்சுமியின் பேட்டி

Trending News