வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

விஜயா போட்ட டிராமா, ஏமாந்து போன முத்து.. பிரயோஜனம் இல்லாத மீனா அதிகாரம் பண்ணும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து வச்ச பொறியில் விஜயா மற்றும் மனோஜ் தானாக மாட்டிக் கொள்கிறார்கள். அதாவது எலுமிச்சம்பழத்துக்கு பயந்து போனதால் அதை தூக்கி எறிந்து விடலாம் என்று இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா மற்றும் மனோஜ் எலுமிச்சை பழத்தை எடுத்துட்டு வருகிறார்கள்.

அப்படி வரும்போது முத்து வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார். பயந்து போன விஜயா கையில் இருந்த எலுமிச்சை பழத்தை கீழே போட்டு விடுகிறார். இதைப் பற்றி முத்து கேட்கும் பொழுது, வீட்டிற்குள் இந்த மாதிரி ஒரு மாந்திரீகமான பொருளை வைத்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும். அதனால் தான் அதை எடுத்து வெளியே போடலாம் என்று என்று நினைத்தேன் என சொல்லி சமாளிக்கிறார்.

விஜயா நடத்தும் நாடகம்

ஆனால் முத்து அப்படி எடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஏன் இந்த நேரத்தில் எடுக்க வேண்டும். அப்படி என்றால் ஏதோ தப்பு பண்ணி இருக்கிறீர்கள் அந்த பயத்தினால் தானே இந்த மாதிரி பண்ணுகிறீர்கள் என்று முத்து கேட்கிறார். உடனே சும்மா எதாவது உளறிக் கொண்டு தேவையில்லாத பிரச்சினை பண்ணாத முத்து என்று சொல்லி மனோஜை கூட்டிட்டு போகிறார்.

அப்பொழுது முத்து, மனோஜை பார்த்து இவன்தான் அக்யூஸ்ட் இவனை நீ ஈசியாக கூட்டிப் போயிட்டாள் அவன் தப்பித்து விடுவான் என்று சொல்லிய நிலையில் அண்ணாமலை அதட்டி கேட்கிறார். உடனே மனோஜ் நடந்த விஷயத்தை அண்ணாமலை இடம் ஒப்பித்து விடுகிறார். ஆமாம் நான் தான் மீனாவின் நகை எடுத்துட்டு போய் கவரிங் நகையை கொண்டு வந்து வைத்தேன் என்று சொல்லுகிறார்.

இதைக் கேட்டதும் அண்ணாமலை, மனோஜ் மீது கோபப்பட்டு அடிக்கிறார். விஜயா தடுத்த நிலையில், அண்ணாமலை இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னிடம் மூஞ்சி கொடுத்து கூட பேசாதே என்று சொல்கிறார். இப்படி இருக்கும் இந்த சூழலை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விஜயா உடனே ஒரு டிராமாவை போட்டு விடுகிறார்.

நீங்கள் என்னிடம் பேச மாட்டீர்களா, அப்படி என்றால் நான் ஏன் இருக்கணும் என்று ரூமுக்குள் போய் கதவை சாத்துகிறார். ஆனால் அங்க போய் ஒன்னும் பண்ணாமல் விஜயா சும்மாதான் இருக்கிறார். இருந்தாலும் வெளியில் இருப்பவர்கள் வாயை அடைப்பதற்காகவும், அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் விஜயா நடத்தும் டிராமாவாக தெரிகிறது.

ஆக மொத்தத்தில் கையும் களவுமாக மாட்டிய பிறகும் விஜயா மற்றும் மனோஜ் தப்பித்து விடுகிறார்கள். இதனால் வழக்கம்போல் முத்து ஒன்னும் பண்ண முடியாமல் ஏமாற்றத்துடன் இருக்கிறார். மீனாவும் எதற்கும் பிரயோஜனம் இல்லாத அளவிற்கு தேவையில்லாமல் குடும்பத்திற்குள் நகையால் பிரச்சினை வேண்டாம். இதை அப்படியே விட்டு விடுங்கள் என்று முத்துவை சமாதானப்படுத்தி மறுபடியும் வேலைக்காரியாக அனைத்து வேலையும் பார்க்கப் போகிறார்.

இதனை தொடர்ந்து ரோகினியும் எதுவும் நடக்காத மாதிரி அந்த வீட்டில் அதிகாரம் பண்ணி மீனாவை அடிமையாகப் போகிறார். இந்த முத்துவும் மீனாவும் திருந்தாதவரை ரோகிணி மற்றும் மனோஜ் தொடர்ந்து தப்புகள் செய்து கொண்டே தான் வருவார்கள். அதிலும் ரோகிணி பற்றிய விஷயமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லை.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News