புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜயா, ரோகிணிக்கு கொடுத்த கிப்ட், இப்பதான் மனசு குளுகுளுன்னு இருக்கு.. ஆட்டத்தை இனிதாக ஆரம்பித்த முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜை ஏமாற்றி பணத்தை ஆட்டைய போட்டது ஜீவா தான் என்று முத்துவுக்கு தெரிந்து விட்டது. உடனே முத்து, ஜீவாவின் வீட்டிற்கு சென்று நீதான் என் அண்ணனை ஏமாற்றி எங்க அப்பாவுடைய பணத்தை ஆட்டையை போட்டுட்டு போனியா? அந்த பணம் எங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ரிட்டயர்மென்ட் ஆன பணம்.

அதை எப்படி நீ வச்சுக்க முடியும் ஒழுங்கு மரியாதையா அந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுக்கணும். இல்லையென்றால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டியது வரும் என்று ஜீவாவிடம் கடுமையாகப் பேசி விட்டார். அதற்கு ஜீவா சிரித்துக் கொண்டே, உங்க அண்ணன் தான் முட்டாள் என்று நினைத்தால் நீயும் அப்படித்தான் இருக்கிறாய்.

அன்னைக்கு எனக்காக விட்னஸ்ல வந்து கையெழுத்து போட்டு கொடுத்தது ஞாபகம் இருக்கிறதா? அன்னைக்கு தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்து உங்கள் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டி முதலுமாக சேர்த்து 30 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேன். பார்லருக்கு போன பொழுது ரோகினி அங்கே வைத்து என்னை லாக் பண்ணி போலீஸ் ஸ்டேஷனில் மொத்த பணத்தையும் வாங்கி விட்டார்.

ஆனால் மனோஜை நான் ஏமாற்றினேன், மனோஜ் உங்களை மட்டும் இல்லாமல் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி இப்பொழுது வரை திருந்தாமல் தான் இருக்கிறானா? இவனுடைய கேரக்டர் தெரிந்துதான் நான் அவனுக்கு முன்னாடி உஷாராகி அவனை ஏமாற்றி பணத்தை எடுத்துட்டு போனேன். இப்பொழுது வாங்கின பணத்தை கூட உங்களிடம் சொல்லாமல் அவனே வைத்திருக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருப்பான்.

ஆனாலும் மனோஜ்க்கு இந்த அளவுக்கு புத்தி கிடையாது, இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது அவனுடைய பொண்டாட்டி ரோகிணியாகத் தான் இருக்கும் என்று ஜீவா, முத்துவிடம் எல்லா உண்மையும் போட்டு உடைத்து விட்டார். ஜீவா சொன்னதுக்கு பிறகு முத்துவுக்கும் எல்லா உண்மையும் புரிந்து விட்டது. உடனே ஜீவாவிடம் நீ என்னுடன் வந்து எங்க வீட்டில் சொல்லு.

நீ சொன்னால்தான் எங்க வீட்டில் எங்க அம்மா என்னை நம்புவாங்க என்று ஜீவாவை கூட்டிட்டு போய் விட்டார். அடுத்ததாக விஜயா வீட்டுக்கு வந்ததும், வழக்கம் போல் மீனாவிடம் தண்ணீர் கேட்டு அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் ஹாலில் நிற்க வைத்து விட்டார்.

அத்துடன் தண்டனை கொடுக்கும் கூண்டிலாக சாப்பாட்டு மேஜையை எடுத்து வந்து மனோஜ் பக்கத்தில் வைத்து அதில் மனோஜை நிற்க வைத்து விட்டார். மற்றும் இதில் சரியான தீர்ப்பு சொல்லும் படி விஜயாவையும் அண்ணாமலையும் உட்கார வைத்து விட்டார். அதன் பிறகு ஜீவா உள்ளே வருகிறார், ஜீவாவை காட்டி இவள் தான் மனோஜை ஏமாற்றி பணத்தை வாங்கிட்டு போனவள் என்று முத்து சொல்கிறார்.

உடனே கோபப்பட்ட விஜயா, என் பையனை ஏமாத்தி பணத்தை எடுத்துட்டு போண பணத்தை எல்லாம் மொத்தமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு ஜீவா, வட்டியும் முதலுமாக 30 லட்சம் கொடுத்து விட்டேன் என்று சொல்லி ஆதாரமாக போலீஸ் ஸ்டேஷனில் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பேப்பரையும் கொண்டுட்டு வந்து காட்டுகிறார்.

இதையெல்லாம் தெரிந்து கொண்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக நிலையில் விஜயா, மனோஜ் சட்டையை பிடித்து எப்படி டா என்னை ஏமாற்றுவதற்கு உனக்கு மனசு வந்துச்சு என்று கோவமாக கேட்கும் பொழுது பயந்து போன மனோஜ் என்ன மன்னிச்சிடுமா எனக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ரோகிணி தான். கிடைத்த பணத்தை வைத்து ஷோரும் ஆரம்பிக்கலாம் என்று ரோகினி தான் எனக்கு ஐடியா கொடுத்தார்.

அதன்படி தான் நாங்கள் இருவரும் பணத்தை உங்களிடம் மறைத்து ஷோரூம் ஆரம்பித்தோம் என்று மனோஜ் உண்மையை உளறி விட்டார். உடனே மொத்த கோபத்தையும் விஜயா, ரோகினிடம் காட்டும் விதமாக அன்னைக்கு 30 லட்சம் பணம் எங்க அப்பா தான் கொடுத்திருக்காங்க என்று எல்லோரிடமும் சொல்லி எங்களை முட்டாளாக்கி விட்டாய் என்று கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

இந்த கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்காக தான் இத்தனை நாளாக காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ற மாதிரி இப்பொழுது தரமான சம்பவம். இது தான் ரோகினிக்கு கிடைத்த கிப்ட், மனசுக்கு குளு குளு என்று இதமாக இருக்கிறது. இதோடு விடாமல் இதனை தொடர்ந்து ரோகிணி பற்றிய ரகசியங்களை கண்டுபிடிக்கும் விதமாக முத்து அவருடைய ஆட்டத்தை தொடங்கி எல்லா விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவார். இனி ரோகிணி கதி அதோ கதி தான்.

Trending News