விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் இப்பொழுது ஏஐ டெக்னாலஜி மூலம் மீண்டும் அவரை படத்தில் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் அனுமதி வாங்கிய பின்னர் கோட் படத்தில் வெங்கட் பிரபு ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மீண்டும் திரையில் காட்டவிருக்கிறார்.
இப்பொழுது கேப்டனை மற்றொரு படத்திலும் இதே தொழில்நுட்பம் மூலம் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். அதற்காக அந்த குழு லண்டனில் முகாமிட்டு இருக்கிறது. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்திலும் கேப்டன் வர இருக்கிறார்.
லாரன்ஸ் உடன் சம்பவம் செய்ய வரும் கேப்டன்
விஜயகாந்த் மறைவில் நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் விரும்பினால் அவர் படத்தில் நடிக்க தயார் என்று வாக்குறுதி கொடுத்தார். இப்பொழுது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியும் உள்ளார். சண்முக பாண்டியன் நடிக்கும் படம் படைத்தலைவன். இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்து ராகவா லாரன்ஸ் மிரட்டி இருக்கிறார்.
படத்தை பார்த்த ராகவா லாரன்ஸ், படம் சூப்பராக வந்திருக்கிறது. இந்த காட்சிகளை அப்படி வைக்கலாம், இப்படி வைக்கலாம் என நிறைய அறிவுரைகளை கூறியுள்ளார். கூறியது மட்டுமல்லாமல் அந்த படத்தில் 15 நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
படைத்தலைவன் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்த் கிட்டதட்ட 10 நிமிடங்கள் வருகிறார். அதற்காக லாரன்ஸ் சண்முக பாண்டியனுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த படம் விஜயகாந்த் மகனுக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறி வருகிறார்.