செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

20 வருடம் கழித்து விஜயகாந்த்துடன் இணையும் ஸ்டார் நடிகர்.. மாஸ் கூட்டணியா இருக்கே

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து இன்று ஒரு ஹீரோவாக தன்னை நிலைநாட்டி இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவரின் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்குகிறார். இந்த திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் திரைப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்ற ஒரு தகவலும் உண்டு.

இந்தப் படத்தில்தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிகர் சரத்குமாரும் இந்த படத்தில் நடித்து வருகிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து 1992 ஆம் ஆண்டு தாய்மொழி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க விஜயகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் ஆண்டனி தான். ஏனென்றால் அவர்தான் இந்த கதாபாத்திரங்களுக்கு அவர்கள் இருவரும் தான் பொருத்தமாக இருப்பார்கள். எனவே அவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக கூறினாராம். அதன் பிறகே அவர்களை படக்குழு இந்த கேரக்டரில் நடிப்பதற்கு அணுகியுள்ளது.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் தற்போது அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் ஆண்டனியின் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சம்மதித்து நடித்து வருகிறார். மேலும் விஜயகாந்த் சரத்குமார் இருவரும் இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து உள்ளது.

Trending News