வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வலிமை படத்துக்கு போட்டியாக களம் இறங்கிய விஜய்.. அசத்தலாக வெளிவந்த பீஸ்ட் பட அப்டேட்

பொதுவாக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அவர்களின் திரைப்படங்கள் பற்றிய ஒப்பீடு கண்டிப்பாக இருக்கும். அதிலும் தொழில் முறையாக போட்டி போடும் நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது கசிந்துள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருந்தாலும் அதே அளவுக்கு அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் அசத்தலாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திலும் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். அதாவது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்து தான் அமைக்கப்பட்டிருக்கும் என்று அனைவரும் மிகவும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த படத்தில் தங்கை சென்டிமென்ட் அதிகமாக இருக்கிறதாம். படத்தின் இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க தங்கை சென்டிமென்ட் அடங்கிய காட்சிகள்தான் அதிகம் இடம்பெறுகிறது என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அந்த சென்டிமென்ட் காட்சியில் விஜய் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறாராம். அவருக்கு இணையாக அந்த தங்கை கேரக்டரில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர். அந்த வீடியோக்களின் மூலமே அவருக்கு மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மலையாளத்தில் நான் பிரகாஷன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் ஜோடியாக மனோகரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு இந்த பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News