வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீட் தேர்வின் அவலம், பட்டியல் போட்ட விஜய்.. TVK தளபதியின் 3 கருத்துகளால் ஆடிப் போகும் அரசியல் களம்

Vijay: இந்த வருட பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கடந்த வாரம் விஜய் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். அதன் இரண்டாவது கட்டமாக இன்று விடுபட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது.

அதில் பேசிய விஜய் நீட் தேர்வின் அவலத்தை பற்றியும் அதை நிரந்தரமாக விலக்க வேண்டும் எனவும் மேடையில் கூறினார். அவருடைய இந்த அனல் பறக்கும் பேச்சுக்கு மாணவர்களின் கரகோஷம் மேடையை அதிர செய்தது.

அவர் கூறியிருப்பதாவது, நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில வழி கல்வியில் படித்த மாணவர்கள் எப்படி NCERT பாடத்திட்டம் வழி உருவான வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது பன்முகத்தன்மையை சிதைக்கிறது. இந்த வருடம் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல குளறுபடிகள் இருந்தது. இதனால் அதன் மேல் இருக்கும் நம்பகத்தன்மை மக்களுக்கு போய்விட்டது. அதனால் தமிழக சட்டமன்றம் நீட் ரத்து குறித்து கொண்டு வந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.

விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

இதை ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை இதில் சிக்கல் இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி கல்வி மற்றும் சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்துள்ளார்.

அதேபோல் மாநில அரசுக்கு உண்டான சுதந்திரத்தை ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். மேலும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்காக வேண்டுமென்றால் நீட் தேர்வை தனியாக நடத்திக் கொள்ளட்டும்.

இப்படியாக நீட் ரத்துக்கான சில ஐடியாக்களையும் அவர் கொடுத்துள்ளார். மேலும் அவர் இதெல்லாம் நடக்க காலதாமதம் ஆகும். அப்படியே நடந்தாலும் அதை நடக்க விட மாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தம் கடந்த சில நாட்களாகவே விஜய் மக்கள் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசவில்லை என்ற கருத்து இருந்தது. அதை உடைக்கும் வகையில் முக்கிய பிரச்சனையான நீட்டை அவர் கையில் எடுத்திருப்பது வரவேற்கப்படுகிறது.

மேலும் அவருடைய தெளிவான பேச்சும் கருத்துக்களும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆகமொத்தம் நீட் அவலத்தை பற்றி பேசி இருக்கும் தளபதி இதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

அரசியல் களத்தில் ஸ்கோர் செய்யும் விஜய்

Trending News