Ajith : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டரை அதகலம் செய்ய குட் பேட் அக்லி வருகிறது. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமலும், லாபத்தை கொடுக்காமலும் சென்றது.
ஆனால் குட் பேட் அக்லி டிரைலரை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக இந்த படம் பெரிய வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. இந்த சூழலில் அஜித்தின் படத்திற்காக விஜய் பட ரிலீஸ் தள்ளி போய் உள்ளதாம்.
அதாவது 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு. விஜய், ஜெனிலியாவின் அசத்தலான நடிப்பில் உருவான இப்படம் அப்போதே வசூலில் நல்ல லாபத்தை கொடுத்தது.
குட் பேட் அக்லியால் தள்ளிப்போன விஜய் படம்
கில்லி ரிலீசுக்கு பிறகு சச்சின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்ததால் தயாரிப்பாளர் ஏப்ரல் 18 இப்படத்தை வெளியிடுகிறார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் சச்சின் படம் தமிழ் புத்தாண்டு அன்றுதான் வெளியிடப்பட்டது.
இப்போது குட் பேட் அக்லி படம் வெளியாவதால் ஒன்பது நாட்களுக்குப் பிறகு சச்சின் படத்தை வெளியிடுகிறார்களாம். மேலும் சச்சின் படத்திற்காக பெரிய பேனர்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறதாம்.
ஆனால் ஏப்ரல் 12க்கு பிறகு தியேட்டர் முன்பு வைக்கலாமென்று கலைப்புலி தாணு கூறியிருக்கிறார். ஏனென்றால் அஜித் படத்திற்கு வழிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்து உள்ளாராம். மேலும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இது குறித்து பேசிய கலைப்புலி தாணு, வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியான போது திரையரங்கு கிடைக்கவில்லையா. அது போன்று சச்சின் படத்திற்கும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறி இருக்கிறார்.