கூலி படம் தான் போடணும்னு தியேட்டரையே திறக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்.. மல்டிபிளக்ஸ் கட்டிய விஜய் நண்பர்

சினிமாவில் வெற்றிகரமாக வலம் வரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் சென்னையில் கட்டியிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சினிமா தயாரித்து வந்தவர் இப்பொழுது தியேட்டர் ஓனராகவும் மாறிவிட்டார்.

சென்னையில் புதியதாய் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கட்டியிருக்கிறார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஓனரான லலித் குமார். இவர் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து இப்பொழுது தான் வெற்றிகரமாக அந்த கட்டிடத்தை முடித்துள்ளார்.

இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஒரு ஸ்கிரீன் மட்டும் எஃபிக்ஸ் ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டது. இது கோயமுத்தூர் மற்றும் மதுரையில் மட்டும் தான் ஒரு சில தியேட்டர்களில் இருக்கிறது. சென்னையில் இப்பொழுது தான் இந்த டெக்னாலஜியை தயாரிப்பாளர் லலித் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த திரையரங்கின் வேலைகள் முழுவதுமாக முடிந்து விட்டது ஆனால் அதன் திறப்பு விழாவை தான் இப்பொழுது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் கூலி படம் ஆகஸ்ட் 15 ரிலீசாக உள்ளது. அதே நாளில் அந்தப் படத்தை திரையிட்டு, ஓப்பனிங் விழாவை கொண்டாடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என இருக்கிறாராம்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏதாவது பிரச்சனை காரணமாக அந்த படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனால் திறப்பு விழாவையும் தள்ளி போட போகிறாராம். படம் ரிலீஸ் செய்யும் நாளில் தான் காம்ப்ளக்ஸை திறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம். லியோ, மாஸ்டர் போன்ற படங்கள் கொடுத்து விஜய்க்கு நெருங்கிய நண்பராக வலம் வருகிறார் லலித் குமார்.

Leave a Comment