புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கோட் படம் தான் கடைசி.. விஜய்யின் திடீர் முடிவால் சிக்கலில் தளபதி 69

Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டார். இதற்கு அடுத்ததாக அவருடைய தளபதி 69 படத்தை தான் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கு பல இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து இறுதியாக ஹச் வினோத் தான் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் இப்படம் கைவிடப்படுவதாகவும் கோட் தான் கடைசி படமாக இருக்கும் என்றும் செய்திகள் பரவுகிறது.

ஏனென்றால் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் விரைவில் மிகப்பெரும் மாநாடு ஒன்றை நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி ஏற்கனவே மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என அவர் மக்கள் பணியை ஆரம்பித்து விட்டார்.

கோட் தான் கடைசி படம்

அதன் தொடர்ச்சியாக அவர் இந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளையும் அவர் விரைவில் தொடங்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் தளபதி 69 படத்தில் நடித்தால் காலதாமதம் ஏற்படும். அது தன்னுடைய அரசியல் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர் கோட் படத்தோடு திரை பயணத்தை முடித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.

இந்த செய்தியால் ரசிகர்கள் தற்போது உச்சகட்ட சோகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது பற்றி விஜய் தரப்பில் விசாரித்த போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை எதையும் நம்ப வேண்டாம் என கூறுகின்றனர்.

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று இது குறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் ஹாஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கைவிடப்படுகிறதா விஜய்யின் தளபதி 69.?

Trending News