ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காந்தி வேஷம் போட்டு பார்த்திருக்கேன் காந்தியே வேஷம் போட்டு இப்பதான் பார்க்கிறேன்.. தளபதியின் மிரட்டல் கோட் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Vijay: விஜய் வெங்கட் பிரபு கூட்டணியை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்கள் சில நாட்களாகவே பரபரப்பாக இருக்கின்றனர். ஏனென்றால் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் கங்குவா பட டிரைலரே வந்துவிட்டது.

ஆனால் செப்டம்பர் மாத ரிலீஸ் கோட் ட்ரைலர் வரவில்லை என தயாரிப்பு தரப்பை அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர். அவர்களும் இதோ அதோ என பொறுமையை சோதித்து இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

மேலும் படம் குறித்த போஸ்டர்கள் பாடல்களும் அடுத்தடுத்து வெளியானது. இதில் ஏ ஐ மூலம் விஜய்யை இளமையாக காட்டிய மூன்றாம் பாடல் தான் ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறிப்போனது. ஆனால் அதையெல்லாம் தாண்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

ட்ரெண்டிங்கில் இருக்கும் கோட் ட்ரெய்லர்

ஸ்பை குழுவின் லீடராக இருக்கும் விஜய் எதிர்கொள்ளும் சவால்களும் அவருடைய கடந்த காலம் தான் படத்தின் கதை. இதில் பிரசாந்த், பிரபுதேவா அவரின் டீம் நண்பர்களாக இருக்கின்றனர்.

இப்படியாக தொடங்கி மைக் மோகனின் வில்லத்தனம், விஜயின் குறும்பு என ட்ரைலர் கலக்கலாக இருக்கிறது. அதேபோல் இதுவரை அவர் நடித்த படங்களின் பிரபலமான டயலாக்கையும் கொடுத்து வெங்கட் பிரபு கெத்து காட்டியுள்ளார்.

இது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் என்னப்பா புதுசா ஒன்னும் இல்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. நெட்டிசன்கள் சில சில குறைகளை கண்டுபிடித்தாலும் மொத்தத்தில் கோட் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தளபதியின் மிரட்டல் கோட் ட்ரெய்லர்

Trending News