சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அடிமாட்டு விலைக்கு போன விஜய்யின் GOAT.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு கொட்டிய வியாபாரம்

GOAT Vs Good Bad Ugly OTT Sale: பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் வசூலை வைத்தே அவர்களுடைய மார்க்கெட்டை அடுத்தடுத்த படத்திற்கு உயர்த்தி வருவார்கள். அந்த வகையில் எப்பொழுதுமே ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் விஜய் ஒவ்வொரு படத்திலும் ஜொலித்துக் கொண்டு வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

இதில் விஜய் உடன் இணைந்து பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்,

பிரசாந்த்
பிரபு தேவா
லைலா
சினேகா
மீனாட்சி சவுத்ரி
ராகவா லாரன்ஸ்
அஜ்மல்
வைபவ்
மைக் மோகன்

ஓடிடி-யில் டல்லடித்த விஜய்யின் கோட்

இந்த சூழ்நிலையில் இப்படத்தின் OTT உரிமை பற்றிய சில தகவல் வெளியாயிருக்கிறது. அதாவது விஜய் படம் என்றால் போட்டி போட்டு ஒவ்வொரு நிறுவனமும் வாங்குவதற்கு தயாராக இருப்பார்கள். அதனாலேயே விஜய் படத்திற்கு அதிகமாக வியாபாரமாகும். ஆனால் கோட் படம் கொஞ்சம் ஏமாற்றத்தை பார்த்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ படம் 120 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் அப்பொழுது அந்த படத்திற்காக அவர் கிட்டத்தட்ட 120 கோடி முதல் 150 கோடி வரை சம்பளமாக பெற்றிருந்தார். அப்படி பார்த்தால் கோட் படத்தின் ஓடிடி அதிகமாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்.

ஆனால் போட்டி போட்டு கோட் படத்தை வாங்குவதற்கு வந்த நிறுவனங்கள் ஓடிடி தொகை அதிகமானதால் அப்படியே எஸ்கேப் ஆகி விட்டார்கள். கடைசியில் வழக்கம்போல நெட்பிலிப்ஸ் நிறுவனம் பேரம் பேசி அடிமாட்டு விலையாக 125 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இது தயாரிப்பாளருக்கு ஒருவித நஷ்டமாக தான் இருக்கிறது.

விஜய் நடித்த கடைசி 6 படங்களின் ஓடிடி வியாபாரம்

லியோ : INR 100-150 crores
வாரிசு: INR 60-80 crores
பீஸ்ட்: INR 80-90 crores
மாஸ்டர்: INR 100 crores
பிகில்: INR 60-70 crores
சர்க்கார்: INR 50-60 crores

அதற்கு காரணம் கடைசி படத்தில் விஜய்க்கு சம்பளமாக 120 கோடி கொடுத்த நிலையில், தற்போது கோட் படத்திற்கு 200 கோடி சம்பளத்தை கொடுத்து இருக்கிறார். அப்படி என்றால் ஓடிடி விற்பனை இன்னும் அதிகமாக விற்பனை செய்திருந்தால் மட்டும் தான் அவர்களுக்கு பெரிய லாபமாக இருந்திருக்கும். அந்த வகையில் கோட் படத்தின் வியாபாரம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இதையெல்லாம் விட தற்போது அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திற்கு கோட் படத்தை விட 5 கோடி ஜாஸ்தியாக விற்பனை ஆகி இருக்கிறது. ஆனால் சம்பளம் மட்டும் அஜித்தை விட விஜய்க்கு தான் அதிகம்.

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தை விட இப்பொழுது இவரோட படத்தை போட்டி போட்டு வாங்குவதற்கு பல நிறுவனங்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது அஜித் விஜய்யை ஓவர் டேக் பண்ணி வருகிறார் AK.

கோட் பட வெற்றிக்காக போராடும் வெங்கட் பிரபு

- Advertisement -spot_img

Trending News