Leo-Vijay-Vikram Prabhu: லியோ படத்தைப் பற்றி எவ்வளவு தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் தியேட்டரில் மக்கள் கூட்டம் ஓய்ந்த பாடு இல்லை. டிக்கெட் புக்கிங்காக ரசிகர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கிட்டத்தட்ட 450 கோடியை தாண்டி லியோ வசூல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு விஷயம் அரங்கேற இருக்கிறது.
லியோ படத்தின் டிரைலர் ரோகினி தியேட்டரில் திரையிடப்பட்டது. இதில் உச்சகட்ட மகிழ்ச்சியில் அங்கு உள்ள இருக்கைகளை உடைத்து ரசிகர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள். இதனால் திரையரங்கு உரிமையாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருந்தது. மேலும் தியேட்டர் சேதமடைந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
அதன் பிறகு லியோ படம் ரோகிணி தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என்றும் ஒரு செய்தி பரவியது. அக்டோபர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு லியோ படம் ரிலீஸ் ஆனது. இப்போதும் ரசிகர்கள் ரோகினி தியேட்டரில் லியோ படத்தை ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். ஆனால் இப்போது இந்த தியேட்டர் லியோதாஸை ஓரம் கட்டி விட்டு விக்ரம் பிரபுவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிப்பில் ரெய்டு படம் வெளியாகிறது. ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்து வந்த விக்ரம் பிரபு சமீபத்தில் தொடர் பிளாப்புக்கு பிறகு டாணாக்காரன் என்ற மாஸ் படத்தை கொடுத்திருந்தார்.
இப்போது நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் விக்ரம் பிரபுவின் ரெய்டு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் ரோகினி தியேட்டர் லியோ படத்தை தூக்கி விட்டு விக்ரம் பிரபுவின் ரெய்டு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறது. ஏற்கனவே பாலிவுட்டில் லியோ படம் மந்தமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் ஆயிரம் கோடி வசூலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக லியோ படத்தை ரோகிணி தியேட்டரில் இருந்து தூக்க உள்ளனர். இதனால் எதிர்பார்த்த வசூலை விட லியோ படம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் தீபாவளிக்கு இன்னும் சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் லியோ பெரும் சிக்கலை சந்திக்க இருக்கிறது.
லியோ தாஸை ஓரம் கட்டிய விக்ரம் பிரபு