செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

லியோ விஜய் ஃபேமிலி மெம்பர்ஸ்.. சாக்லேட் கம்பெனியாக மாறிய ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்

லோகேஷ், விஜய் கூட்டணியில் தாறுமாறாக உருவாகி வரும் லியோ படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படத்தில் லோகேஷ் அப்படி என்ன தான் செய்து வைத்திருக்கிறார் என்று நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்போது லியோ படத்தை பற்றிய முக்கிய செய்தி ஒன்று கசிந்துள்ளது.

அதாவது கருமேகங்கள் கலைகிறது என்ற தங்கர் பச்சனின் பட விழாவில் லோகேஷ் கலந்து கொண்டார். அப்போது லியோ படத்தைப் பற்றிய சில அப்டேட்டுகள் கொடுத்திருந்தார். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்போது லியோ படத்தில் இணைந்துள்ளார். அவருடைய காட்சிகள் மற்றும் மன்சூர் அலிகான் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.

Also Read : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் லியோ.. அர்ஜுனுடன் சம்பவத்தை முடித்த விஜய்

இந்நிலையில் ஹாலிவுட் படத்தின் தழுவலாக லியோ படம் உருவாகி வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட் டேவிட் க்ரோனென்பெர்க் இயக்கத்தில் ஜான் வாக்னர் வின்ஸ்லாக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ். இந்த படத்தில் ஒரு உணவாக உரிமையாளர், கொள்ளையர்கள் ஊடுருவி கொள்ளையடிக்க வரும் முயற்சியை முறியடித்து பின்பு உள்ளூர் ஹீரோவாக மாறுகிறார்.

ஆனால் அதன் பிறகு கேங்ஸ்டரால் அச்சுறுத்தப்படுகிறார். அந்தச் சமயத்தில் தன்னுடைய குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை தமிழில் லோகேஷ் ஸ்டைலில் எடுத்து வருகிறார். மேலும் அந்த படத்தில் வரும் நான்கு பேமிலி மெம்பர்ஸ் போல் தான் லியோ படத்திலும் இடம்பெறுகிறார்கள்.

Also Read : ஆடு புலி ஆட்டத்திற்கு அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. என்னம்மா யோசிக்கிறாரு மனுஷன்

அதாவது சாக்லேட் கம்பெனி நடத்தும் விஜய், அவரின் மனைவியாக திரிஷா, இவர்களின் மகளாக பிக் பாஸ் ஜனனி மற்றும் மகனாக தாமஸ் நடிக்கிறார்கள். மேலும் ஹாலிவுட்டில் 2000 ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படமாக தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படம் இடம்பெற்றிருந்தது. அந்தக் கதையில் லியோ படம் உருவாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் எதிர்பார்க்காத ஒவ்வொரு விஷயங்களையும் வைத்து வருகிறார். அதுமட்டும்இன்றி அடுத்த மாதம் லியோ படத்தின் டிரைலர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : சப்போர்ட் கேரக்டரில் நடித்து வாழ்க்கை ஓட்டின 6 நடிகர்கள்.. எது கொடுத்தாலும் நின்னு பேசும் விஜய் நண்பர்

Trending News