Leo Collection Report: பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியான லியோ முதல் நாளிலேயே வசூலில் சக்கை போடு போட்டது. தொடர்ச்சியாக வந்த விடுமுறை நாட்களும் ஆதரவாக இருந்த நிலையில் கலெக்ஷனும் அடுத்தடுத்த நாட்களில் உயர தொடங்கியது. அதைத்தொடர்ந்து லியோ சக்சஸ் மீட்டும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது லியோ பீவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. ஏற்கனவே பல திரையரங்குகளில் லியோ படம் தூக்கப்பட்டதை அடுத்து இப்போது வசூலும் அதிரடியாக குறைய தொடங்கி இருக்கிறது. அதன்படி லியோ வெளியாகி தற்போது 20 நாட்கள் கடந்துவிட்டது.
அதில் இருபதாவது நாளில் 577 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது. ஆனால் 22 வது நாளை பொருத்தவரையில் மொத்தமாக ஒரு கோடி தான் கலெக்ஷன் ஆகி இருக்கிறதாம். அப்படி பார்த்தால் இனி வரும் நாட்களில் இது ஏறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் தீபாவளி ரேஸுக்கு ஜிகர்தண்டா 2, ஜப்பான் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.
Also read: விஜய்க்கு சொம்படிக்கும் 2 முரட்டு வில்லன்கள்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தளபதிக்கு வீசும் வலை
அதனால் லியோ ஜெயிலர் வசூலை முறியடிக்கும் என்பது இனி சாத்தியம் இல்லை. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடி 650 கோடி வரை வசூல் சாதனை செய்தது. அதை முறியடிக்கும் வகையில் லியோ ஆயிரம் கோடி வசூலிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூட வெளிவந்தது.
ஆனால் தற்போது அறநூறு கோடியை நெருங்குவதற்கே இப்படம் தட்டு தடுமாறி வருகிறது. அதனாலேயே ரஜினி ரசிகர்கள் லியோ ஜெயிலரிடம் மண்டியிட தொடங்கி விட்டதாக கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த வசூலும் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை தான் என விஜய் ரசிகர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இப்படியாக ஜெயிலர், லியோ வசூல் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இதை அடுத்து தீபாவளி ரேசில் எந்த படம் முன்னிலை வகிக்கும் என்ற காரசார விவாதம் இப்போதே ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2-ல் கமல் கேமியோ ரோலில் வருகிறார் என்ற விஷயம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also read: சிக்னல் காட்டிய ரஜினி, சிட்டாய் பறந்த இயக்குனர்.. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா