Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா வந்த பிறகு விஜய் மற்றும் காவிரியின் சந்தோசங்கள் பறிபோய் விட்டது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களும் நடக்கிறது. இதனால் காவேரி ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்த ராகினி இதில் குளிர் காய வேண்டும் என்று கிடக்கிற கேப்பில் எல்லாம் காவேரியிடம் தவறாக போட்டுக் கொடுக்கிறார்.
ஆனாலும் இந்த ராகினியை காவிரி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பிறகு விஜய், காவிரியின் மனசை புரிந்து கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் காவிரியை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டது. தன்னை விவாகரத்து பண்ண போகிறார் என்று காவேரி தவறாக புரிந்து கொண்டு காரை எடுத்து அவசரமாக ஓட்டியதால் தலையில் அடிபட்டுவிட்டது.
இதை கேள்விப்பட்ட விஜய் பதட்டத்தில் காவிரியை அன்பாக கண்டிக்கும் பொழுது அதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் காவிரி கோபப்பட்டு விட்டார். மேலும் வெண்ணிலாவை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி எடுத்து வருகிறார். அந்த சமயத்தில் வெண்ணிலா, விஜய் என்ற பெயரை சொல்லியதும் விஜய் முகத்தில் அவ்ளோ பெரிய ஆனந்தம் வந்துவிட்டது.
இதைப் பார்த்த காவேரி எதுவும் சொல்லாமல் அவஸ்தை படுகிறார். ஆனால் காவிரி உண்மையிலேயே இதை நினைத்து பீல் பண்ணுகிறார் என்று விஜய்யும் புரிந்து கொண்டார். அதனால் இனி வெண்ணிலாவுக்கு சிகிச்சை வீட்டில் இருந்து கொடுக்க வேண்டாம் ஆஸ்பத்திரியில் சேர்த்து பார்க்கலாம் என்று விஜய், வெண்ணிலவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே போனதும் விஜய், வெண்ணிலாவின் ட்ரீட்மென்ட் இங்க வச்சு பார்த்துக் கொள்ளலாம் என்று டாக்டரிடம் சொல்கிறார். அதற்கு டாக்டர் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணிலா பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். இந்த சமயத்தில் நீங்கள் எங்கே விட்டுட்டு போனால் பழைய மாதிரி தான் பித்து பிடித்தது போல் இருப்பார்.
அதனால் நீங்கள் வெண்ணிலாவே உங்களுடன் வைத்து வீட்டில் வைத்து பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறார். இதை கேட்டதும் விஜய் மனசு மாறி வெண்ணிலாவே திரும்ப வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். உடனே தாத்தா, நீ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனதும் அங்கேயே வெண்ணிலாவே விட்டுட்டு வந்து விடுவாய் என்று நினைத்தேன். ஏன் திரும்பவும் கூட்டிட்டு வந்து விட்டாய் என கேட்கிறார்.
அதற்கு விஜய், இப்பொழுது வெண்ணிலா கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு வரும் பொழுது ஹாஸ்பிடல் விடுவது சரியாக இருக்காது என்று தோணுச்சு அதனால்தான் கூட்டிட்டு வந்து விட்டேன் என விஜய் தாத்தாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் தாத்தா கேட்ட கேள்வி என்னவென்றால் உன்ன மாதிரி காவிரியும் வேறு யாரையாவது காதலித்து அவரும் இதே மாதிரி ஒரு சூழலில் இருக்கும் பொழுது வீட்டிற்கு கூட்டிட்டு வந்தால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று சரியான கேள்வியை கேட்டு விட்டார்.
இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் திணறுகிறார். அதனால் கூடிய சீக்கிரத்தில் காவேரியிடம் மனம் விட்டு பேசி வெண்ணிலாவின் பிரச்சினையை சரி செய்து விடுவார்.