செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் விஜய்.. அரசியலுக்கு ஆப்படிக்கும் விதமாக அற்ப வேலை செய்யும் தளபதி

Vijay’s Political Entry: விஜய் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கும் இவர் அதற்கான முன்னேற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அவருடைய அரசியல் வரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

இதில் விஜய் அரசியலில் ஜொலிப்பாரா? என்ற சந்தேகம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவருடைய அடுத்தடுத்த நகர்வுகளை வைத்து தான் அவருடைய அரசியல் பிளான், மக்கள் பணி என்ன என்பது தெளிவாக தெரிய வரும்.

இதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு விஷயம் அவருடைய அரசியல் வாழ்வுக்கு ஆப்படிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதாவது தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் ஆர்வத்துடன் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற இருக்கிறது.

Also read: விஜய்யின் அரசியல் ஆட்டத்தால் நொந்து போன அந்த பிரபலம்.. செல்ஃபி வெறி ஊறி போய் நிற்கும் தளபதி

அதற்கான வேலைகளை வெங்கட் பிரபு பார்த்து வருகிறார். ஆனால் அங்கு தான் ஒரு பெரிய டிவிஸ்ட் இருக்கிறது. அதாவது விஜய் இலங்கைக்கு வரும்போது அவரை சந்தித்து உரையாட ராஜபக்சேவின் குடும்பம் மிகவும் ஆவலாக காத்திருக்கிறார்களாம்.

அதில் ராஜபக்சேவின் மகன் விஜய்க்கு நெருங்கிய நண்பராம். அதனால் இவர்கள் சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த சந்திப்பு மட்டும் நிகழ்ந்து விட்டால் விஜய்யின் அரசியல் பயணம் அஸ்தமனம் ஆகிவிடும்.

அந்த அளவுக்கு ராஜபக்சே குடும்பம் தமிழர்களின் கடும் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. அதனால் விஜய் இந்த விஷயத்தில் யோசித்து தான் செயல்பட வேண்டும். இல்லை என்றால் யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டது போல் தளபதியின் நிலை ஆகிவிடும்.

Also read: விஜய், அஜித்தால் குஷியில் ஓடிடி.. தியேட்டர்களை காப்பாற்ற ஓவர் டைம் பார்க்கும் ரஜினி, கமல்

Trending News