செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டனுக்கு மகனாக நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இப்ப 120 கோடி என்பது அசுர வளர்ச்சி தான்

Actor Vijay: தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகனாய் புகழின் உச்சியில் இருக்கும் பிரபலம் தான் விஜய். தான் மேற்கொள்ளும் அடுத்தடுத்த படங்களில் தன் சம்பளத்தை உயர்த்தி கொண்டே போகும் இவர் ஆரம்ப காலத்தில் பெற்ற சம்பளம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தற்பொழுது ஹீரோ கதாபாத்திரம் ஏற்று பட்டைய கிளப்பி வரும் விஜய் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் இயல்பான நடிகராய் நடித்து வந்தார். லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் லியோ படத்தையும் அடுத்து வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படம் தான் தளபதி 68.

Also Read: விஜய், அஜித்திற்காக கதை எழுதி காத்திருந்த ஹிட் இயக்குனர்.. இறக்கும் வரை நிறைவேறாத ஆசை

படத்தின் வசூலுக்கு ஏற்ப தன் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் விஜய் ஆரம்ப சம்பளம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. தற்பொழுது வரை விஜய்யின் சம்பளம் 120 கோடியாக இருக்கும் நிலையில் அடுத்து வரப்போகும் படமான தளபதி 68ல் விஜய்யின் சம்பளம் 200 கோடி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே இவரின் படங்களுக்கு ஹைப் இருக்கும் நிலையில், தற்பொழுது படத்தில் இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவலும் பரபரப்பை உண்டுபடுத்தி வருகிறது. அவ்வாறு 1984 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வெற்றி. இப்படத்தில் விஜயகாந்த், விஜி, விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் விஜய். அதுவும் கேப்டனின் மகனாக இவரின் நடிப்பை கண்டு சுமார் 500 ரூபாய் சம்பளம் ஆக கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பி எஸ் வீரப்பா. அதை தொடர்ந்து இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் எண்ணற்ற படங்களில் கதாநாயகனாய் இடம்பெற்ற நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்தும் 500 ரூபாய் சம்பளம் வாங்கியும் தன் நடிப்பை தொடங்கியவர் தற்பொழுது 200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து, அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறார். இத்தகைய சம்பவம் இவர் நடிப்பின் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தும்  விதமாய் இருந்து வருகிறது.

Also Read: லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

Trending News