வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்தை பொருட்டாகவே மதிக்காத விஜய்யின் பேச்சு.. அமைதியாக கொடுக்கும் பதிலடி இதுதான்!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன், ஷாம், சரத்குமார் உள்ளிட்ட பலரும் காலனித்துக்கொண்டனர். அதன் புகைப்படங்கள், விஜய் மேடையில் பேசிய வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதன் அதிகாரப்பூர்வ ஒளிப்பரப்பு சன் டிவியில் வரும் புத்தாண்டு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் சன் டிவியும் தனது பங்குகுக்கு தளபதி,தளபதி என பிஜிஎம்களை தெறிக்கவிட்டு ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது. சரி இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யின் மேடை பேச்சு எப்போதும் போல அரசியல் பேச்சுகள் இல்லாமல், அஜித்தை மறைமுகமாக தாக்குவது போல் பேசியுள்ளார்.

Also Read : விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு

வழக்கம்போல மேடையில் மைக் ஸ்டான்டை விஜய் முன் நிப்பாட்டிய நிலையில், பேச ஆரம்பித்தார் விஜய். ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கமே கைத்தட்டல்கள், விசில் சத்தம் என அதிர்ந்ததையடுத்து, 1992 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நடிகர் என்னுடனே அறிமுகமாகி தனக்கு கடும் போட்டியை கொடுத்தார் என பேசினார். இதை கேட்ட அரங்கமே அஜித்தை தான் விஜய் புகழ்ந்து பேசுகிறார் என சற்று ஆர்வத்துடன் கேட்டனர்.

ஆனால் கடைசியில், அந்த போட்டியாளர் வேறு யாருமில்லை விஜய் என்கிற ஜோசப் விஜய் தான் என சொன்னவுடன் அரங்கமே சில நொடிகள் அமைதியாகி ஆர்ப்பரித்தது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த ரசிகர்களும் சற்று கடுப்பாகியுள்ளனர். ஏனென்றால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அண்மையில் விஜய் தான் நம்பர் ஒன் என அஜித்தை ஓரங்கட்டி பேசியது பலருக்கும் முகம் சுளிக்க வைத்தது.

Also Read : இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

இவர் பேசியதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் மேடையில் தனக்கு எதிரி, போட்டியாளர் எல்லாமே நான் தான் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுக்கு பின்னால் எதோ உள்நோக்கம் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் விஜய்யின் இந்த பேச்சுக்கு அஜித்தின் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலடியும் தற்போது வரை வரவில்லை.

ஆனால் அஜித்தும் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளார் என்ற செய்தியும் விஜயை போலவே அஜித்தும் ரசிகர்களை சந்தித்து பேசவுள்ளார் எனவும் அஜித்தின் நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ வாரிசு, துணிவு படங்கள் திரையரங்குகளில் ஓடினால் போதும் என்ற கண்ணோட்டத்தில் அஜித்,விஜயின் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க தயராகி வருகின்றனர்.

Also Read : 32 வருஷமா விஜய்க்கு போட்டி இவர்தான்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் தெறிக்க விட்ட பேச்சு

Trending News