திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புது மாற்றத்தை கையில் எடுக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுத்த அங்கீகாரம்

Vijay-TVK: உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பெண்கள் ஆக எல்லாத்துறையிலும் சாதித்து வரும் மகளிருக்கு சம நீதியும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

ஆனால் எங்களுடைய நோக்கமே சம நீதி தான் என அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். பொதுவாக மற்ற கட்சிகள் எல்லாம் மகளிர் அணிக்கு தலைமையாக தான் பெண்களை நியமிப்பார்கள். ஆனால் விஜய்யின் கட்சி தற்போது முக்கிய அணிக்கு தலைமையாக பெண்களை நியமித்திருப்பது மிகப்பெரிய கௌரவமாக இருக்கிறது.

vijay-tvk
vijay-tvk

அதை ரசிகர்கள் மகளிர் தினமான இன்று கோலாகலமாக கொண்டாடி ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் பெற்றுள்ளனர். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் பொறுப்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமதி விஜயலட்சுமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Also read: மக்கள் பணின்னா இப்படித்தான் இருக்கணும்.. ஆட்சியை பிடிக்கும் முன்பே ஆட்டம் காண வைக்கும் விஜய் வெற்றிக் கழகம்

மாநில இணை செயலாளர் ஆக திருமதி யாஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநில பொருளாளர் பதவி திரு வி சம்பத்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாநில துணை செயலாளர் ஆக திரு விஜய் அன்பன் கல்லணை மற்றும் எம் எல் பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

tvk-vijay
tvk-vijay

2026 தேர்தலை குறி வைத்திருக்கும் விஜய்யின் கட்சி தற்போது இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை அதுவும் மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கி இருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதை தற்போது பெருமையோடு பகிர்ந்து வரும் தளபதியின் ரசிகர்கள் கட்சி மாநாட்டின் போது மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆக மொத்தம் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே விஜய் அதற்கான வேலையில் தீயாக ஈடுபட்டுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Also read: விஜய், அஜித் வாரிசுகளுக்கு போட்டியான குட்டி சூர்யா.. ஜோவை உரித்து வைத்திருக்கும் தியாவின் வைரல் போட்டோ

Trending News