புதன்கிழமை, ஜனவரி 15, 2025

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த விஜய்யின் டாப் 6 பாடல்கள்.. ரஜினி, அஜித்தை பிரம்மிக்க வைத்த தளபதி

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்படும் விஜய்யின் படங்களை மட்டுமல்ல அந்தப் படங்களில் இடம்பெறும் பாடல்களையும் தாறுமாறாக ஹிட்  அடிக்கச் செய்கின்றனர். அதிலும்  சமீபத்தில் வெளியான டாப் நடிகர்களின் படங்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல்களின் லிஸ்டில் டாப் 6 இடத்தைப்  பிடித்த படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் ஆச்சரியமூட்டும் அளவுக்கு விஜய் சாதனை புரிந்திருக்கிறார். ஏனென்றால் இந்த டாப் 6  இடத்தில் மற்ற எந்த ஹீரோக்களின் படங்களும் இடம்பெறாமல் விஜய்யின் படங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய்க்கு இருக்கும் நடன திறமை தான். இளசுகுகளை விஜய்யின் பாடல்கள் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம்.

Also Read: சக்கரை ரெடியானதும் மொய்க்கும் தேனீக்கள்.. விஜய் படத்தால் அட்வான்ஸை திரும்பி வாங்கிய அக்கட தேசம்

அவருடைய படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக நடனமாடுவதை இளைஞர்கள் ரசித்து அவ்வாறே தாங்களும் நடனமாட முயற்சிக்கின்றனர், இதனாலேயே அந்த பாடல் ட்ரெண்டாகி விடுகிறது. அந்த வகையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல்கள் இடம் பெற்ற படங்களின் லிஸ்டில் முதல் இடத்தை பீஸ்ட் படமும், 2-வது இடத்தை மாஸ்டர் படமும் பிடித்துள்ளது.

3-வது இடம் வாரிசுவுக்கும், 4-வது இடம் மெர்சல், 5-வது இடம் பிகில் படத்திற்கும் கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 6-வது இடம் வரும் ஆயுத பூஜை அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோபடத்திற்கு கிடைத்திருக்கிறது. லியோ படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Also Read: ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி இளசுகளால் ரணகளம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு டாப் 6 இடத்தில் விஜய் படத்தின் பாடல்கள் 100 மில்லியன் கடப்பதில் இவர் மட்டுமே இருந்து வருகிறார். அது மட்டுமல்ல விஜய் நடிப்பில் இதுவரை 11 படங்களில் உள்ள பாடல்கள் 100 மில்லினை கடந்துள்ளது.

இதில் முதல் ஆறு இடங்களை விஜய் படம் தான் பெற்று தளபதி ரசிகர்களை கெத்து காட்ட வைக்கிறது. அத்துடன் அஜித், ரஜினி, தனுஷ் போன்ற வேறு எந்த ஹீரோவும் இந்த லிஸ்டில் வர முடியவில்லை என்பது உண்மை. வரப்போற காலங்களில் இது நடந்தால் பார்க்கலாம். மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு கொடுக்க கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில், இவருடைய இந்த சாதனை ரஜினியை பிரமிக்க வைத்துள்ளது.

Also Read: மன்சூர் அலிகானை விட கம்மியான சம்பளம் வாங்கிய விஜய்.. ரகசியத்தை போட்டு உடைத்த வீரபத்திரன்

Trending News