மகாநதி சீரியலில் வெண்ணிலாவுடன் விஜய் செய்த கல்யாணம்.. ஏமாற்றுத்துடன் நிற்கும் காவேரி, சந்தோசத்தில் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவுக்கு ஞாபகம் திரும்பிய நிலையில் விஜய் எங்கே என்று கேட்டு பாட்டி தாத்தாவிடம் பிரச்சினை பண்ணுகிறார். உடனே பாட்டி, விஜய்க்கு போன் பண்ணி வீட்டுக்கு உடனே வா என்று சொல்லிக் கூப்பிட்டு விட்டார். வீட்டிற்கு வந்த விஜயை வெண்ணிலா அரவணைத்து பீல் பண்ணுகிறார்.

இதற்கு விஜய், தாத்தா பாட்டி இருக்கும் பொழுது என்ன பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு வெண்ணிலா அவங்க இருந்தால் என்ன பிரச்சனை. நமக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டதே என்று சொல்கிறார். இதை கேட்டதும் தாத்தா பாட்டி ராகினி விஜய் அதிர்ச்சியாகி விட்டார்கள். உடனே இதுதான் சான்ஸ் என்று ராகினியும், காவிரி இனி விஜய் வாழ்க்கைக்குள் நுழைய முடியாது என்று சந்தோசப்பட்டு கொண்டார்.

பிறகு விஜய் என்ன சொல்கிறாய் என்று வெண்ணிலவை பார்த்து கேட்கிறார். அதற்கு வெண்ணிலா கையில் போட்டிருந்த மோதிரத்தை காட்டி இது என்ன என்று ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறார். உடனே விஜய் நடந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறார். அதாவது காதலிக்கும் பொழுது வெண்ணிலா ரொம்பவே பயத்துடன் இருந்த பொழுது நம்மளை யாரும் பிரிக்க முடியாது என்று சொல்லி விஜய் அம்மா ஞாபகமாக போட்டிருந்த மோதிரத்தை கழட்டி வெண்ணிலாவுக்கு போட்டுவிட்டு இதுதான் நம்முடைய கல்யாணத்துக்கு அஸ்திவாரம்.

இந்த மோதிரம் போட்டதிலிருந்து நீ என்னுடைய பொண்டாட்டி நான் உன்னுடைய புருஷன் நமக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று விஜய் வெண்ணிலாவிடம் சொல்லிவிட்டார். உடனே வெண்ணிலாவும் எனக்கு இந்த மோதிரம் கல்யாணம் போதும். இனி யாரு நினைத்தும் நான் கவலைப்பட மாட்டேன் என்று சொல்லி இரண்டு பேரும் கட்டிப்பிடித்துக் கொண்டதை விஜய் யோசித்துப் பார்க்கிறார்.

பிறகு என்ன தப்பு பண்ணி இருக்கிறோம் என்று இப்பொழுது யோசித்த விஜய், தாத்தா பாட்டியிடம் வெண்ணிலா அப்பொழுது ரொம்ப பயத்தில் இருந்ததால் சமாதானப்படுத்துவதற்காக நான் அந்த மோதரத்தே போட்டு விட்டேன் என்று சொல்கிறார். உடனே வெண்ணிலா என்ன சொல்கிறாய் நீ தானே நமக்கு கல்யாணம் ஆகிவிட்டதற்கு அடையாளம் இந்த மோதிரம் என்று சொன்னாய்.

இப்பொழுது மாத்தி பேசுகிறாய் என்று கேட்கிறார், அதற்கு விஜய் அப்ப நடந்த மாதிரி இப்ப எதுவும் இல்லை எல்லாம் மாறிவிட்டது என்று சொல்கிறார். உடனே வெண்ணிலா என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது விஜய் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய பொண்டாட்டி பெயர் காவிரி நான் அவளுடன் தான் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதை கேட்டதும் வெண்ணிலா அதிர்ச்சியாகி அழ ஆரம்பித்து விட்டார்.

இன்னொரு பக்கம் விஜய் இடம் கர்ப்பமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று காவேரி ஆசையுடன் கோவிலுக்கு போகிறார். அப்படி போகும் பொழுது விஜய் இடம் கர்ப்பம் என்ற விஷயத்தை சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்து கனவு காண்கிறார். ஆனால் அது வெறும் கனவாக போகப் போகிறது.

ஏனென்றால் காவேரியிடம் சொன்னபடி கோவிலுக்கு விஜய் வரமாட்டார். பிறகு நடந்த விஷயத்தையும் காவிரி தெரிந்து கொண்ட நிலையில் கர்ப்பம் விஷயத்தை விஜய் இடமிருந்து மறைத்து விடுவார். இதனால் வெண்ணிலா மற்றும் காவிரிக்கு நடுவில் விஜய் மாட்டிக் கொண்டு எப்படி இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவார் என்பதுதான் அடுத்து வரப்போகும் கதையாக இருக்கும்.

Leave a Comment