ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மகாராஜாவாக ஜெயித்தாரா நடிப்பின் ராஜா விஜய் சேதுபதி.. அனல் பறக்கும் முழு விமர்சனம்

Maharaja Movie Review: பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுக்கு கூட 50 ஆவது படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்காது. விஜய் சேதுபதி பொருத்தவரைக்கும் கடந்த சில வருடங்களாகவே அவருக்கு பெரிய அளவில் ஹிட் படங்கள் என்று எதுவுமே இல்லை. அவர் நடித்த நெகட்டிவ் கேரக்டர்கள் படம் மட்டுமே ஒரு சில வெற்றி பெற்று இருக்கின்றன.

இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என விஜய் சேதுபதி சபதம் எடுத்த பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் படம் மகாராஜா. இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அதன் முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

நடுத்தர வயது மதிக்கத்தக்க விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்திருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் போலீஸ் ஸ்டேஷன் போகும் விஜய் சேதுபதி அங்குள்ள போலீஸ்காரர்களிடம் தன்னுடைய லட்சுமியை காணவில்லை என கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.

போலீஸ்காரர்களும் லட்சுமி யார் என்று கேட்க விஜய் சேதுபதி சொல்லும் விவரம் அவர்களை கடுப்பேத்துகிறது. ஒரு கட்டத்தில் லட்சுமியை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு நான் 5 லட்சம் ரூபாய் தர போகிறேன் என சொல்லுகிறார்.

ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க முன் வருகிறார் என்றால் அந்த லட்சுமி இடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என போலீஸ்காரர்கள் ஆர்வம் கொண்டு தேட ஆரம்பிக்கிறார்கள். படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியால் நிறைந்திருந்தாலும் விறுவிறுப்பு இல்லாதது குறைவாக தெரிகிறது.

அதே நேரத்தில் இரண்டாவது பாதி நொடிக்கு நொடி விறுவிறுப்பையும் சஸ்பென்சையும் கொடுத்து சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறது. இயக்குனர் நித்திலன் என்ன சொல்ல வந்திருக்கிறார் அதை தெளிவாக சொல்லி வெற்றி பெற்று விட்டார்.

விஜய் சேதுபதிக்கு தன்னுடைய ஐம்பதாவது படமான மகாராஜா அவரை நடிப்பின் ராஜாவாக மீண்டும் நிலை நிறுத்தி இருக்கிறது. கையில் கிடைக்கும் படத்தை எல்லாம் நடிக்காமல், வருஷத்திற்கு உன்னை இப்படி தரமாக கொடுத்தாலே போதும் என ரசிகர்கள் விஜய் சேதுபதியை இப்போது தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லாதது பெரிய மைனஸ் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள், மற்றும் டப்பிங் குளறுபடி இருக்கிறது. முதல் பாதியை பார்த்து முடிக்கும் அளவுக்கு பொறுமை இருந்தால், ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தி படம் முடியும்போது கிடைக்கும்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மீண்டும் தமிழ் சினிமாவின் மகாராஜா படத்தின் மூலம் சிம்மாசனம் போட்ட அமர்ந்து விட்டார் விஜய் சேதுபதி.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.75

மகாராஜா வெளிவருவதற்கு உள்ள விஜய் சேதுபதி பட்ட பாடு

Trending News