சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய் சேதுபதி புகழ் இழக்க காரணமான 3 விஷயங்கள்.. கோபத்தில் இன்று வரை விழுகின்ற பெரிய அடி

விஜய் சேதுபதி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்று சொல்லலாம். இன்று வளர்ந்து உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் துணை நடிகராக சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் இன்று தன்னை நிரூபித்து காட்டி ஜெயித்திருக்கிறார்.

இப்பொழுது அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் குறிக்கோளாக இருந்துவருகிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு வருடத்திற்கு 12 -13 படங்களில் நடிக்கிறார். பல கோடிகள் சம்பளம் பெறுகிறார். சினிமாவிற்காக சில, பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

அப்படிப்பட்ட விஜய்சேதுபதி புகழை இழக்கக் காரணமாக அமைந்த மூன்று விஷயங்கள்.இந்த 3 விசயங்களும் அவரின் புகழை அழித்து தரைமட்டமாக்கி வருகிறது. விஜய் சேதுபதியை கண்டாலே எரிச்சலடையும் நிலைக்கு ஆளாகிய மக்கள்

1. குறுகியகால லாபத்துக்கு அடிமையாகி நிறைய படங்கள் பண்ணினார்: துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் வந்ததும், தெரியாது சூட்டிங் எடுத்ததும் தெரியாது, தியேட்டரைவிட்டு ஓடிப்போனது தெரியாதுஅவரை மக்கள் கொண்டாடிய காலத்தில் இந்த படங்களை சீக்கிரமாய் எடுத்து அதிக லாபம் பெற்று விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டார்.

2. 800 பட பிரச்சனை: முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை படமாக நடிக்க முற்பட்டார்: படத்திற்கு இங்கே இருக்கும் சீமான் முதல் ஈழத்தமிழர்கள் வரை பிரச்சனை செய்தனர். ஈழத்தமிழர்கள் விஜய்சேதுபதி படத்தை கோபத்தில் இன்றுவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். இதனாலேயே வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் இவர் படத்தை திரையிட்டால் வெறுக்கின்றனர்.

3. தொடர்ந்து நடிப்பதால் வந்த சலிப்பு: சினிமாவில் ஒரேடியாக முகத்தை காட்டி கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. அப்படி நடித்ததால் இது அந்த படமா, இந்த படமா என்பதில் கூட சில சந்தேகங்கள் வந்துவிடும். அப்படி தொடர்ந்து தன் முகத்தை வெள்ளித்திரையில் காட்டி பெயரை கெடுத்துக் கொண்டார்.

Trending News