வீரா சீரியலில் கண்மணி ராகவனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜி.. வீரா மாறன் போகிறதற்குள் நடந்த விபரீதம்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ராமச்சந்திரன் வீட்டிற்குள் வந்து ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இருப்பதால் யாரிடமும் சொன்னால் நம்ப மாட்டாங்க என்ற காரணத்திற்காக மாறன் வீரா இருவரும் விஜி போனை ட்ராக் செய்து வருகிறார்கள்.

அப்படி டிராக் செய்ததில் தான் மாறன் ஆரம்பித்த பிரியாணியில் கலப்படம் பண்ணியது விஜி என்று கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் அந்த பழி கண்மணி மீது விழுந்ததால் விஜி எஸ்கேப் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜி அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் கண்மணி மற்றும் ராகவனுக்கு ஸ்கெட்ச் போடும் விதமாக விஜி கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார். ராமச்சந்திரன் அனாதை ஆசிரமம் ஒன்று ஆரம்பிப்பதற்காக முடிவு எடுத்திருந்தார். இதற்குப் போகும் பொழுது ராகவன் மற்றும் கண்மணியே வரவிடாமல் விஜி, அவர்கள் வரும் காரை அடித்து தூக்க சொல்லிவிட்டார்.

இந்த விஷயம் விஜி போனை ட்ராக் பண்ணும் பொழுது வீரா மாறனுக்கு தெரிந்து விட்டது. உடனே கண்மணி ராகவனை காப்பாற்றுவதற்கு இருவரும் அந்த இடத்திற்கு போகிறார்கள். ஆனால் அதற்குள் ராகவன் மற்றும் கண்மணிக்கு தெரிந்து விட்டது பின்னாடி நம்மளை ஒரு லாரி பாலோ பண்ணி வருகிறது. காரிலும் பிரேக் பிடிக்கவில்லை என்றதும் ராகவன், கண்மணியே பாதுகாப்பாக கீழே தள்ளிவிட்டு மரத்தில் போய் ராகவன் மோதிவிடுகிறார்.

அதன் பிறகு வந்த மாறன் வீரா, ராகவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார்கள். ஆனால் இந்த விஜி பற்றிய விஷயம் மாறன் வீராவுக்கு தெரிந்தும் ஏன் விஜியின் முகமூடியை கிழிக்காமல் இருக்கிறார்கள் என்றால் எதனால் விஜி இப்படி செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அதற்குள் விஜி ஒவ்வொரு பிரச்சனையை உண்டாக்கி வருகிறார். ஆனால் இந்த முறை மாறன் மற்றும் வீராவிடமிருந்து விஜி தப்பிக்க முடியாது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →