விபூதியால் பிரச்சனையில் சிக்கிய விக்ரம், ஜிவி பிரகாஷ்.. பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சாண்டி

பா ரஞ்சித் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் மக்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம் நடிக்கயுள்ளார். பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் பா ரஞ்சித்துடன் விக்ரம் இணைந்துள்ள படம் 19 ஆம் நூற்றாண்டில் கே ஜி எஃப்பில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிவகுமார், விக்ரம், கலையரசன், இயக்குனர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பட பூஜையில் விபூதி வைப்பதை விக்ரம் மற்றும் ஜிவி பிரகாஷ் தவிர்த்துள்ளனர்.

கிறிஸ்டின் மதத்தைச் சேர்ந்த சாண்டி மாஸ்டர் மரியாதை நிமித்தமாக விபூதி வைத்துக் கொண்டுள்ளார். சாண்டி மாஸ்டர் பற்றி அனைவரும் அறிந்தது தான். எல்லாவற்றையும் கலகலப்பாக எடுத்துக் கூடியவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் இருக்கும் இடத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்.

இந்நிலையில் பொதுவாக ஒரு படத்தின் பூஜை நடைபெறும் போது வேறு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சாண்டி திருநீர் வைப்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஜிவி பிரகாஷ் மற்றும் விக்ரம் விபூதியை ஏற்றுக்கொள்ளாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது இந்த படத்தின் ஹீரோ விக்ரம், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பொது நாகரீகம் கருதி விபூதியை வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சாண்டி இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்ற உள்ளார். ஆனாலும் மதத்தைத் தாண்டி அவர் செய்த இந்தச் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.