Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Vikram: வீர தீர சூரனும், ரஜினி முருகனும் பின்னும் வலை.. படம் ட்ராப் ஆனதால் இயக்குனருக்கு போடும் போட்டி

Vikram: வீர தீர சூரனும், ரஜினி முருகனும் பின்னும் வலை.. படம் ட்ராப் ஆனதால் இயக்குனருக்கு போடும் போட்டி

விக்ரம், வீர தீர சூரன் பாகம் இரண்டு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட் கொடுக்காத விக்ரம் இந்த படம் ஹிட் ஆகும் என 100 சதவீதம் நம்பிக்கையில் இருக்கிறார். படத்தின் டீசரும் வெளியாகி பெரும் […]

விக்ரம், வீர தீர சூரன் பாகம் இரண்டு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட் கொடுக்காத விக்ரம் இந்த படம் ஹிட் ஆகும் என 100 சதவீதம் நம்பிக்கையில் இருக்கிறார். படத்தின் டீசரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் சிவகார்த்திகேயனும் ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படமும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இதில் அமரன் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஹிட் இயக்குனர் ஒருவருக்கு வலை வீசி வருகிறார்.

படம் ட்ராப் ஆனதால் இயக்குனருக்கு போடும் போட்டி

சிவகார்த்திகேயன் போலவே விக்ரமும் அந்த மாஸ் டைரக்டரை அடிக்கடி சந்தித்து வருகிறார். ஆனால் அவர் மகன் துருவ்விக்ரம் படத்திற்காக தான் இவர்கள் சந்திப்பு என மொத்தபேரும் நம்பி இருக்கும் வேளையில் இவர் கமிட்டாகி உள்ளார். துருவ்விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் கபடிபடக்கதையில் நடிக்கிறார்.

நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பின் புறநானூறு படத்தில் நடிப்பதாக இருந்தது. சுதா கொங்காரா, சூர்யா இருவரும் கமிட்டான படம் புறநானூறு. இந்தப் படம் பல பேச்சுவார்த்தைகளுக்கு பின் நின்று போனது. இப்பொழுது சுதா கொங்காரா கையில் எந்த படங்களும் இல்லை.

சுதா கொங்காராவிற்கு விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அடுத்த புராஜெக்ட் பண்ணுவதாக இருந்தால், நாங்கள் ரெடி என தூது விட்டிருக்கின்றனர். இதில் விக்ரம் ட்ராப் ஆன புறநானூறு படத்திற்கு கூட தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கூடிய விரைவில் இவர்கள் கூட்டணி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.