Wayanad Landslide: தற்போது ஒட்டு மொத்த மக்களும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேண்டுதல் வைத்து வருகின்றனர். கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வயநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணியில் இறங்கி இருக்கிறது தேசிய பேரிடர் மீட்பு குழு. ராணுவ படை, விமானப்படை, தீயணைப்பு படை என அனைவரும் துரிதமாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மண்ணுக்கடியில் சிக்கி இருப்பவர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இது பற்றிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அதை பார்க்கும் போதே உயிர் நடுங்குகிறது. எங்கு திரும்பினாலும் கதறல்களும் மரண ஓலங்களும் மனதை கனக்க வைத்துள்ளது. தற்போது கேரள அரசுக்காக தமிழ்நாடு சார்பாக முதல்வர் ஸ்டாலின் 5 கோடி நிவாரண உதவி செய்துள்ளார்.
கேரளாவை கண்டுக்காத விஜய், கமல்
அது மட்டும் இன்றி நடிகர் விக்ரம் 20 லட்சம் நிதியுதவி செய்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. வேறு எந்த தமிழ் நடிகர்களும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளாக இருக்கும் கமல், விஜய் இருவரும் தங்களுடைய அனுதாப அறிக்கையோடு அமைதியாகிவிட்டனர்.
இதில் விஜய்க்கு கேரளாவில் எண்ணற்ற ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கேரளாவில் நடந்த கோட் பட சூட்டிங்கின் போது அவரை வரவேற்ற ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படி இருந்தும் கூட விஜய் எந்த நிதி உதவியும் அளிக்காமல் இருப்பது விமர்சனமாக மாறியுள்ளது
200 கோடி 300 கோடி என சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சங்களை கொடுக்க கூட மனசு இல்லாமல் இருக்கின்றனர். தங்கள் படம் மட்டும் வெளி மாநிலங்களில் ஓட வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் ஒரு பைசா கூட தர மாட்டோம் என்பது போல் இருக்கிறது அவர்களின் இந்த அமைதி.
இதைத்தான் நெட்டிசன்களும் தற்போது கேள்வியாக கேட்டு வருகின்றனர். இதில் முதல் ஆளாக ஓடி வந்த விக்ரம் மற்ற நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இவரை போல டாப் ஹீரோக்களும் கேரள அரசுக்கு தங்களால் முடிந்ததை கொடுத்து துணை நிற்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.