சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விக்ரமிற்கு துளிர்விட்ட வேண்டாத ஆசை.. பிதாமகன் போடும் விபரீத திட்டம்

விக்ரம் சமீப காலமாக ஒன் மேன் ஆர்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே குதிரை கொம்பாக இருக்கிறது. கடந்த பத்து வருடங்களாக விக்ரமிற்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.

கடைசியாக இவருக்கு ஓடிய படம் என்றால் பொன்னியின் செல்வன். அதுவும் இவர் சோலோ ஹீரோவாக நடிக்கவில்லை. கும்பலோடு கோவிந்தா போட்டார். பொன்னியின் செல்வன் நாவலை இயக்கி வெற்றிகண்டார் மணிரத்தினம்.

கடாராம் கொண்டான், கோப்ரா, மஹான் என அடுத்தடுத்து தொடர் தோல்விகள். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் தங்களான். பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படமும் தோல்வியை தான் பரிசாக கொடுத்தது.

இப்பொழுது S U அருண் குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த மாதம் 30 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். இந்த படம் டீசர்,ட்ரைலர் என இரண்டும் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் விக்ரமுக்கு தற்பொழுது விபரீத ஆசை ஒன்று துளிர்விட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த படம் “மார்கோ” இந்த படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் ரத்தக்களரியாக அருவருப்பான காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளது. இப்படியும் ஒரு படமா எனரசிகர்கள் தெரித்து ஓடும் அளவிற்கு இருக்கும் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுகிறார் விக்ரம். அதற்கான வேலைகளையும் பார்த்து வருகிறாராம்.

Trending News