2015 சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ”ஐ” படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி விக்ரமுக்கு எந்த படமும் அமையவில்லை. சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான், கோப்ரா, மகான், தங்களான் என அடுத்தடுத்து இறங்கு முகமாகவே இருக்கிறது. இதனால் விக்ரம் ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி ஒரு வரமாக விக்ரமுக்கு அமையப்போகும் படம் வீரதீரசூரன். இந்த மாதம் மார்ச் 27ஆம் தேதி வெளிவர இருக்கிறது. படத்திற்கு இப்பொழுதே ஏகப்பட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ். விக்ரமுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் உறுதி என கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்து பட்டையை கிளப்பி உள்ளது.
வீரதீரசூரன் படத்தால் சத்தியஜோதி, டான் பிக்சர்ஸ், டர்மரிக் மீடியா விஜய் டிவி மகேந்திரன் என அனைவரும் விக்ரம் கால் சீட்டுக்காக க்யூவில் நிற்கிறார்கள். இதனால் அவருக்கு ஓவர் டிமாண்ட் ஆகியுள்ளது. இருந்தபோதிலும் விக்ரம் சிபு தமீமிக்கு தான் கால் சீட் கொடுத்துள்ளார்.
விக்ரமின் இந்த டிமாண்டுக்கு வீரதீர சூரன் படம் தான் காரணம். அந்த படத்தை தயாரித்தவர் சிபு தமிம். மேலும் அந்த படம் பாகம் 2 என குறிப்பிட்டுள்ளனர். அதனால் முதல் பாகம் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின் ரெடியாகும். அப்படி என்றால் பழைய தயாரிப்பாளருக்கு கால் சீட் கொடுப்பதுதான் நியாயம் என மனுநீதி போல் விக்ரம் அவருக்கு டேட் கொடுத்துள்ளார்.
அது மட்டும் இன்றி இனிமேல் கமிட்டாகும் புது படங்களுக்கு விக்ரம் 50 கோடிகள் சம்பளம் கேட்கிறார். கொஞ்சம் பேச்சு வார்த்தை நடத்தினால் ஐந்து கோடிகள் குறைத்து 45 கோடிகள் வரை இறங்கி வருகிறாராம். பல வருடங்களுக்கு அப்புறம் விக்ரம் பழையபடி சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறார்.