Veera Dheera Sooran: இன்று காலையிலேயே வெளியாகி இருக்க வேண்டிய வீர தீர சூரன் முக்கிய பிரச்சினையால் தள்ளிப் போய் இருக்கிறது. டிஜிட்டல் உரிமம் தொடர்பான பிரச்சனை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
B4U நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிபதி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இதனால் 12 மணிக்கு மேல் படம் வெளியாகும் என ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் தயாரிப்பு தரப்பு இன்னும் சமரச பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது. தற்போது ஒட்டுமொத்த படக்குழுவும் பிரச்சனையை தீர்க்க தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
வீர தீர சூரன் தடை நீங்குமா.?
அதன்படி விக்ரம் தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை தற்காலிகமாக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளார். அவர் மட்டும் இன்றி எஸ் ஜே சூர்யா, இயக்குனர் அருண் குமார், துஷாரா என அனைவரும் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
பல கஷ்டங்களுக்கு நடுவில் உருவான படம் ரசிகர்களை சென்றடைந்தால் போதும் என்பதுதான் அவர்களின் எண்ணம். அதனால் சம்பளத்தை அவர்கள் விட்டுத்தர சம்மதித்திருக்கின்றனர்.
இதை அடுத்து தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. விரைவில் B4U இந்த வழக்கை வாபஸ் வாங்கும் என தெரிகிறது.
மேலும் படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கவலையில் இருந்த சீயான் ரசிகர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.