Vikram and Dhruv Vikram: அப்பாவிற்கு இருக்கும் பேரும் புகழையும் வைத்து சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய தனித்திறமையை காட்டி முன்னேற வேண்டும் என்று போராடி வருகிறார் துருவ் விக்ரம். அதே நேரத்தில் விக்ரமும் தன்னுடைய மகனின் நடிப்பு திறமையால் சினிமாவில் அவருக்கென்று ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அதனால் அவரால் முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாலா கையில் ஒப்படைத்து ஆதித்யா வருமா என்ற படத்தில் இணைய வைத்தார். ஆனால் இந்த படம் அப்படியே தலைகீழாக துருவ் விக்ரமுக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது.
இதனால் துவண்டு போன விக்ரம் அடுத்தடுத்து ஹிட் இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அந்த வகையில் இந்த இயக்குனர் படம் எடுத்தால் கண்டிப்பாக விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாரி செல்வராஜை லாக் பண்ணி விட்டார்.
மாரி செல்வராஜின் புது முயற்சி
அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கூட்டணி உருவாகப் போகிறது. இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் முதல் வாரத்திலேயே படப்பிடிப்பு துவங்கப் போகிறது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கப் போகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க ஒரு கபடி விளையாட்டை மையமாக வைத்து இருக்கப் போகிறது. அத்துடன் படப்பிடிப்பு தூத்துக்குடியை சுற்றி நடக்கப்போகிறது. இதற்காக கடந்த ஆறு மாதமாக துருவ் விக்ரம் முறையாக பயிற்சி எடுத்து வருகிறார்.
இவர் மட்டும் இல்லாமல் இவருடைய அப்பா விக்ரமும் கபடி விளையாட்டை பற்றி ஒரு புத்தகத்தை மும்மரமாக படித்து வருகிறார். அதன் மூலம் மகனுக்கு பல அட்வைஸ்களையும் கொடுத்து வருகிறார்.
எப்படியாவது இப்படத்தின் மூலம் மகன் ஹிட் அடித்து விட வேண்டும் என்று ஒரு அப்பாவாக போராடி வருகிறார். மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கப் போகிறது.
இந்த நிறுவனம் ஆதித்யா பிர்லா நிறுவனத்துடன் டைஅப் வைத்திருக்கிறது. இப்படத்தை தயாரிக்கப் போவதால் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை. ஆனால் படம் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
அந்த வகையில் இப்படத்தின் மூலம் மாரி செல்வராஜுக்கு ஒரு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. இதில் ஒரு பிரச்சனை உறுதி. எப்படியும் சாதி பற்றிய கருத்துக்கள் கண்டிப்பா இருக்கும்.