செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உயிர் போகும் அளவிற்கு உடலை வருத்தி விக்ரம் நடித்த 6 படங்கள்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கோமாவுக்கு போயிருப்பாரு

Vikram Dedicated 6 Flims: சினிமாவில் படிப்படியாக முன்னேறி உச்சம் பெற்ற நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். சேது படத்தில் இவரை சியான் என்று அழைத்த பிறகு ரசிகர்களும் அவ்வாறே செல்லமாக அழைக்கின்றனர். சியான் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தன்னை எந்த அளவிற்கு வருத்தனுமோ அந்த அளவிற்கு உடலை வருத்திக்கொண்டு உயிர் போகும் அளவுக்கு அர்ப்பணித்து நடிக்க கூடிய மகா நடிகர். அப்படி இவர் நடித்த ஆறு படங்களை பற்றி பார்ப்போம்.

சேது: இயக்குனர் பாலாவின் முதல் படம் என்பதோடு நடிகர் விக்ரமின் சினிமா கேரியரை புரட்டி போட்ட படம் தான் சேது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் விக்ரம் மனநல பாதிக்கப்பட்டவர் போல் நடித்தார். ஆனால் நிஜமாகவே அந்த கேரக்டருக்குள்ளே சென்றுவிட்டார். தன்னுடைய உடலையும் வருத்திக் கொண்டு, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு மாறினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு பேசி பழகி அவர்களைப் போலவே நடந்து கொண்டார். இவரை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர கொஞ்ச நாட்கள் தேவைப்பட்டது. அந்த அளவிற்கு இந்த படத்திற்காக விக்ரம் தன்னையே அர்ப்பணித்தார்.

காசி: தில் படத்தில் போலீஸ் கெட்டப்பிற்காக கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் ஹிட் கொடுத்த விக்ரமுக்கு தொடர்ச்சியாக கிடைத்த வாய்ப்பு தான் காசி. இந்தப் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் மெலிந்த தேகத்தில் கண் தெரியாத நபராக நடிக்க வேண்டியதாக இருந்தது. அவர் எந்தவித லென்ஸையும் பயன்படுத்தாமல் தன்னுடைய கருவிழியை அவரே மறைக்கும்படி பார்வையை வைத்துக் கொண்டார். 55 நாட்கள் படப்பிடிப்பிற்காக விக்ரம் தன் பார்வையை இப்படியே வைத்து நடித்தார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அவரது பார்வையே பறிபோனது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து விக்ரம் மீண்டும் பார்வை திறனை பெற்றார். இன்னமும் இவருக்கு கண்ணாடி போட்டால்தான் தெளிவான பார்வை தெரியும். காசி படத்திற்காக தன்னுடைய பார்வையை இழந்த விக்ரமின் தியாகம் தான், அந்தப் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தது.

Also read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

பிதாமகன்: பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஹிட்டான படம் பிதாமகன். இந்த படத்தில் விக்ரம் ஒரு வெட்டியானாக நடித்தார். இதில் சியான் விக்ரமின் கேரக்டரை அவ்வளவு எளிதாக யாராலும் பண்ணி விட முடியாது. எங்கேயோ மேல பாத்து சிரிச்சுகிட்டு கேனத்தனமாக இந்த படத்தில் நடித்தார். இந்த படப்பிடிப்பு முடியும் வரை அவ்வாறே அவர் செய்து கொண்டிருந்தார். இந்த படம் முடியும் வரை அவர் தனது வீட்டிற்க்கே செல்லவில்லை. இந்த படத்திற்காக தன்னுடைய மனநிலை பாதிக்கும் அளவிற்கு தன்னையே வருத்திக் கொண்டார். படம் முடிந்த பிறகு தான் அந்த கேரக்டரில் இருந்து அவர் வெளிவந்தார்.

தெய்வத்திருமகள்: ஒரு தந்தை மகளின் பாச போராட்டத்தை சொல்லும் கதை தான் தெய்வத்திருமகள். இதில் விக்ரம் மனவளர்ச்சி குன்றிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டருக்காகவே இதேப் போன்று இருக்கும் மனிதர்களுடன் பேசி பழகி அவ்வாறாகவே தன்னை மாற்றிக் கொண்டார். இந்த படப்பிடிப்பு முடியும் வரை அவர் அந்த கேரக்டரில் இருந்து வெளிவரவில்லை. கொஞ்சம் விட்டிருந்தால் பைத்தியமே பிடிச்சிருக்கும், அந்த அளவிற்கு விக்ரம் இந்த கதாபாத்திரத்தின் உள்ளே சென்றுவிட்டார்.

: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த இதே கூட்டணி மீண்டும் ஐ படத்தில் தொடர்ந்தது. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தன் உடம்பை மிகவும் வருத்தி நடித்தார். ஒரு சமயத்தில் இவரின் உடல் நிலையை கருதி, கூடவே மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றனர்.

நாளுக்கு நாள் இவருடைய உடல் நிலையும் மனநிலையும் மோசமாகிக் கொண்டிருக்கிறது, இது அதிகமானால் கோமா நிலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஐ படப்பிடிப்பின் போது விக்ரமை பார்த்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்படியும் கேட்காத விக்ரம், ‘என்னை அந்நியன் படத்தின் மூலம் ஊரறிய செய்த சங்கருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்’ என்று ஐ படத்தில் மிகவும் துணிச்சலாக உயிரைத் துட்சமாக எண்ணி நடித்தார்.

தங்கலான்: வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆகும் படம் தான் தங்கலான். விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை கேஜிஎஃப்-ல் மிக மோசமான சூழ்நிலையில் எடுத்திருக்கின்றனர். இங்கு பகலில் கடுமையான வெயில், இரவில் குளிர் என மாறி மாறி வதைக்கும். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு விக்ரம் தன்னையே மாற்றி இருக்கிறார்.

மேக்கப்பிற்காக மட்டும் அதிகாலையில் எழுந்து நான்கு மணி நேரம் செலவிட்டுள்ளார். இதுவரை இவர் நடித்த சேது, பிதாமகன், ஐ போன்ற படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் 3% கடினம் கூட அந்த படங்களில் கிடையாது என்று தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கூறினார்.

Also read: விஜய்யுடன் மோதியதால் வந்த இடம் தெரியாமல் தடுமாறும் விக்ரம்.. அடிமேல் அடி வாங்கும் பரிதாபம்

Trending News