திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அப்பா மகனை பார்க்க கூடாத படுக்கையறை காட்சி.. டபுள் மீனிங் இயக்குனரால் நிலைகுலைந்த விக்ரம்

விக்ரம் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் சிறிது சிறிதாக முன்னேறி இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலனை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படி அவர் சினிமாவில் வேற லெவலில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மகன் துருவ் விக்ரமுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதையடுத்து விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் இப்போது எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவரை வைத்து வர்மா என்னும் படத்தை பாலா இயக்கியது பற்றியும் ஏன் அந்த திரைப்படம் வெளிவரவில்லை என்பது பற்றியும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் இம்ப்ரஸ் ஆன விக்ரம் தன் மகனை அந்த பட ரீமேக்கில் நடிக்க வைக்க ஆசை பட்டார்.

Also read: விக்ரம், சூர்யாவுக்கு போட்டியாக கெட்டப் மாற்றும் கில்லாடி நடிகர்.. ஓவர் ரிஸ்க் எடுத்ததால் கதறி அழுத அம்மா

அதற்காக அவர் சினிமாவில் தன்னை உயர்த்திவிட்ட பாலாவை நம்பி தன் மகனை ஒப்படைத்தார். படப்பிடிப்பும் நன்றாக சென்றது. அதற்கிடையில் ஒரு முறை கூட விக்ரம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததே கிடையாது. ஏனென்றால் பாலா எந்த நேரத்தில் எப்படி மாறுவார் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் அந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை.

அதன் பிறகு சூட்டிங் முடிந்தவுடன் படத்தை பார்க்கலாமா என்று தயங்கியபடியே அவர் பாலாவிடம் கேட்டிருக்கிறார். பின்னர் தயாரிப்பாளர், விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் அமர்ந்து படத்தை பார்த்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் படத்தை பார்த்த விக்ரமுக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. தயாரிப்பாளர் கூட கலங்கி போய் அமர்ந்திருக்கிறார். அதுக்கும் மேலாக துருவ் விக்ரம் சிறிது நேரம் கூட படத்தை பார்க்க முடியாமல் எழுந்து வெளியே சென்றிருக்கிறார்.

Also read: துருவ் விக்ரம் பண்ணும் சேட்டை.. அப்பா பெயரை காப்பாற்ற வேண்டாம், கெடுக்காம இருந்தா போதும்

ஏனென்றால் அந்தப் படம் ஏகப்பட்ட படுக்கையறை காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் என்று பலான படம் ரேஞ்சுக்கு படுமோசமாக இருந்திருக்கிறது. ஒரு அப்பா மகனை பார்க்க கூடாத காட்சிகளை எல்லாம் பாலா ஒரு படமாக எடுத்திருக்கிறார். இதனால் ரொம்பவும் அப்செட் ஆன விக்ரம் எதுவுமே கூறாமல் காரில் ஏறி சென்று இருக்கிறார். இதனால் கடுப்பான பாலா என்னை எல்லாரும் அவமதித்து விட்டீர்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் தயாரிப்பாளர் விக்ரமிடம் உங்கள் மகனின் வாழ்க்கை ரொம்பவும் முக்கியம். எனக்கு எத்தனை கோடி நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை. இந்த படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு பாலா படுமோசமாக அந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் விக்ரம் தன் மகனை ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

Trending News