வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

56 வயதிலும் மெனக்கெடும் விக்ரம்.. சியான் வெற்றிக்காக பார்த்து பார்த்து செதுக்கும் ரஞ்சித்

மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா திரைப்படம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இப்படி விக்ரமின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி பூஜையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் ஒரு பீரியட் படமாக உருவாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமான பல விஷயங்கள் இருக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறாராம். அது என்ன என்பதை பட குழு தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளது.

அந்த கதாபாத்திரத்திற்காக விக்ரம் தற்போது பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறாராம். 56 வயதிலும் அவர் தன்னுடைய கேரக்டருக்காக இவ்வளவு அதிகமாக மெனக்கிடுவது பலரையும் பாராட்ட வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து இன்னும் சில முன்னணி நடிகர்களும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் பா ரஞ்சித் தற்போது ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம். விக்ரமை இயக்க வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரிய கனவு. ஆனால் கபாலி, காலா போன்ற திரைப்படங்களால் அந்த வாய்ப்பு தள்ளி கொண்டே போனது. தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை ரஞ்சித் சரியான முறையில் பயன்படுத்துவதற்காக தீவிரம் காட்டி வருகிறாராம்.

Trending News