வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இளவட்ட வயசில் துருவ் செய்யும் மட்டமான வேலை.. உச்சகட்ட கவலையில் இருக்கும் விக்ரம்

துருவ் விக்ரமை எப்படியாவது சினிமாவில் வளர்த்து விட வேண்டும் என்று விக்ரம் படாதபாடு பட்டு வருகிறார். சீனியர் நடிகராக விக்ரம் இருந்தாலும் தற்போது வரை தன்னுடைய பங்களிப்பை சினிமாவில் கொடுத்து வருகிறார். அதுமட்டும்இன்றி இப்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் விக்ரமின் உழைப்பில் பத்து சதவீதம் கூட துருவ் விக்ரம் போட்டது போல் தெரியவில்லை. போதாக்குறைக்கு அவர் செய்யும் விஷயம் தற்போது சியான் விக்ரமை உச்சகட்ட கவலையில் ஆழ்த்தியுள்ளது. இளவட்ட வயது என்றால் அப்படி, இப்படி இருப்பது சகஜம் தான்.

Also Read : கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?

ஆனாலும் துருவ் விக்ரம் எல்லை மீறி செல்வதாக சினிமா விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார். அதாவது துருவ் விக்ரம் முதல் படத்திலேயே ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருப்பார். அந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் பனித்தா சந்து. ஆதித்ய வர்மா படத்தில் இவர்களது நெருக்கமான காட்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் இவர்கள் இருவருமே இப்போது டேட்டிங் செய்து வருவதாக பயில்வான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் ஒன்றாக ஊரை சுற்றி திரிகிறார்களாம். மேலும் கடந்த புத்தாண்டு அன்று இவர்கள் வெளிநாடு சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read : மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம்.. தரமான செலக்சன் செய்த ஜெய் பீம் இயக்குனர்

இந்த சூழலில் துருவ் விக்ரம் மற்றும் பனித்தா சந்து இருவரும் உல்லாசமாக இருப்பதாக பயில்வான் சொல்வது உண்மையாக என்று ரசிகர்களை யோசிக்க வைக்கிறது. எப்படியாவது துருவ் விக்ரமை முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என மாரி செல்வராஜை நம்பி விக்ரம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் வயசு கோளாறில் துருவ் விக்ரம் இவ்வாறு செய்து வருவதால் சினிமாவில் அவரது பெயர் மோசமாகிவிட்டது. இதை போக்க வேண்டும் என்றால் இனியாவது தனது படங்களில் கவனம் செலுத்தி ஒரு தரமான ஹிட் படத்தை கொடுத்தால் மட்டுமே முடியும். துருவ் விக்ரம் அதை செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : துருவ் விக்ரமை வாட்டி வதைக்கும் மாரி செல்வராஜ்.. அந்த விளையாட்டு மூலம் அப்பா இடத்தை பிடிக்கும் மகன்

Trending News