Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பலான புகைப்படம் வெளியிட்டதால் வந்த விளைவு.. இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த விக்ரமின் காதலி

பலான புகைப்படம் வெளியிட்டதால் வந்த விளைவு.. இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த விக்ரமின் காதலி

கவர்ச்சியான போட்டோவால் நிம்மதியை தொலைத்த விக்ரம் பட நடிகை.

Vikram Movie Actress : இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் சோசியல் மீடியா பெரிய அளவு வளர்ச்சி பெறவில்லை. ஆனால் இப்போது ஒரு புகைப்படம் போட்டால் அது காட்டு தீ போல் பரவி ட்ரெண்டாகி விடுகிறது. சமீபத்தில் அப்படித்தான் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராஷ்மிகா போல் AI டெக்னாலஜி மூலம் சித்தரித்திருந்தனர்.

இந்நிலையில் பலான புகைப்படத்தால் தனது வாழ்க்கையே தொலைந்து விட்டதாக விக்ரம் பட நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். அஜித், விக்ரம், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் கிரண். இவர் சமீபத்தில் ஷகிலா பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கிரண் எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதால் மன உளைச்சலில் படங்களில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து சிறிது இடைவெளி எடுத்து சினிமாவுக்கு வந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு தான் ஒரு ஆப்பை உருவாக்கி அதில் கிளாமர் போட்டோக்களை கிரண் பதிவிட்டுள்ளார்.

இந்த பலான போட்டோக்களால் இரவு தூக்கத்தை தொலைத்து இருக்கிறார். ஏனென்றால் நைட் என்று கூட பார்க்காமல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் கிரணுக்கு போன் செய்து படுக்கைக்கு அழைப்பார்களாம். தினமும் இது போன்ற பிரச்சனையை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறி இருக்கிறார்.

அதோடு இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதால் நான் அப்படிப்பட்டவள் என்று நினைக்கிறார்கள். நான் ஒன்னும் சினிமாவில் மோசமான படத்தில் நடிக்கவில்லை, என்னை பற்றி மோசமாக வரும் கமெண்டுகள் தன்னை பாதித்து உள்ளதாக அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.