திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்நியன் முதல் கோப்ரா வரை விக்ரமிற்கு இத்தனை தோல்வி படங்களா? அதல பாதாளத்திற்கு சரிந்த மார்க்கெட்

விக்ரம் 90களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் முகம் 2000 ஆம் ஆண்டு அறியப்பட்டது. அந்த வருடத்தில் வெளியான சேது திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம் என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடித்தார். அதன்பின் அவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்தது. அதில் அவரது நடிப்பு மட்டுமே தனித்துவமாக தெரியும் அளவிற்கு நடித்து வந்தார்.

ரொம்ப வருடங்கள் கழித்து வந்தாலும் ஒரு சில வருடங்களில் முக்கிய இயக்குனர்கள் படங்களில் நடித்து அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டார். 2005ல் வெளியான அந்நியன் படம் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்தது. அடுத்து மஜா மற்றும் பீமா போன்ற திரைப்படங்கள் நன்றாக சென்றது. 2009 இல் வெளியான கந்தசாமிலிருந்து தொடர்ந்து ராவணன் படம் தோல்வியடைந்து.

Also read: விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்

2011 வெளியான தெய்வத்திருமகள் அனைவராலும் விரும்பப்பட்ட இன்றுவரை விரும்பப்படுகிற திரைப்படமாக விக்ரமுக்கு அமைந்தது. பின்னர் வெளியான ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்கள் மோசமான தோல்வியை சந்தித்தன. அவரும் அடுத்த முயற்சியாக எதுவும் செய்யாமல் சாதாரணமாக இருந்து வந்தார்.

ரொம்ப கஷ்டப்பட்டு பல கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்த திரைப்படம் இருமுகன் படம் எடுத்த விதத்தில் மட்டுமே நன்றாக இருக்கும் ஆனால் பார்க்க முடியாதபடி எடுத்திருப்பார்கள். மிகப்பெரிய தோல்வியை தழுவிய திரைப்படம், அதிலிருந்து அடுத்து வெளிவந்த ஸ்கெட்ச் மற்றும் எதிர்பார்ப்பில் வெளியான சாமி 2 மிகவும் மோசமான தோல்வியை தழுவியது.

Also read: ஏஆர் ரஹ்மானால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம்.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்க!

கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படம் ரொம்ப ஸ்டைலிஷாக நடித்திருப்பார் ஆனால் படம் ஓடவில்லை. இந்த வருடத்தில் 2022ல் எப்படியாவது வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து மகான் திரைப்படத்தை OTT-யில் வெளியிட்டார், இதுவும் மோசமான தோல்வியை தழுவியது.

விக்ரம் 2008ல் இருந்து 2022 வரை 13 படங்களில் நடித்துள்ளார் அதில் ஒரு படம் மட்டுமே பிளாக்பஸ்டர் ஹிட். மீதி உள்ள அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது யாரும் எதிர்பார்க்காத தோல்வியை தொடர்ந்து இத்தனை வருடங்கள் தோல்வி கொடுத்த விக்ரம் அடுத்து வெளியிடப்படும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் வெற்றி பெறவில்லை என்றால் இவரும் ஒரு சாதாரண ஹீரோவாக ஒரு ஓரமாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக கருதப்படுகிறது.

Also read: நாலாபக்கமும் பிரச்சனை, உச்சக்கட்ட விரக்தியில் விக்ரம்.. நெஞ்சு வலிக்கு இதுதான் காரணமோ?

Trending News