புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என்ன பண்ணியும் பிரயோஜனமில்லை.. அந்தப்படத்தை பெரிதும் நம்பியிருக்கும் விக்ரம் பிரபு

ஒரு பெரிய திரை குடும்பத்தின் வாரிசாக விக்ரம் பிரபு சினிமாவில் நுழைந்தாலும் தான் நடித்த முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தார். அதன்பின் அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதைகளால் சினிமாவில் பெரிய சறுக்கலை சந்தித்தார். அதிலிருந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்காக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வெற்றிமாறனுடன் துணை இயக்குனராக தமிழ் இயக்கிய டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபு நடித்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

டாணாக்காரன் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. தற்போது டாணாக்காரன் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இவர் இப்படத்தின் ரிலீஸுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளதால் இப்படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு பகையே காத்திரு, பாயுமொளி நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் டைகர் என்ற திரில்லர் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. விக்ரம் பிரபுவின் அடுத்த அடுத்த படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News