Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Love Marriage Review : அறிமுக இயக்குனர் ஷண்முகப்ரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா, அருள்தாஸ் மற்றும் பலர் நடிப்பில் லவ் மேரேஜ் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனியின் […]

Love Marriage Review : அறிமுக இயக்குனர் ஷண்முகப்ரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா, அருள்தாஸ் மற்றும் பலர் நடிப்பில் லவ் மேரேஜ் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனியின் மார்கன், தெலுங்கில் கண்ணப்பா ஆகிய படங்களுடன் போட்டி போட்டு லவ் மேரேஜ் படம் வெளியாகி இருக்கிறது.

அதாவது 30 வயது நிரம்பிய இளைஞனாக இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு பெண் பார்க்க செல்கிறார்கள். அப்போது பெண்ணை பார்த்த உடனே விக்ரம் பிரபுவுக்கு பிடித்து போக காதல் செய்ய ஆரம்பித்து விடுகிறார். ஆனால் இவர்களது திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

கடைசியில் பெண் பார்த்து காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறாரா என்பது தான் லவ் மேரேஜ் படத்தின் கதை. விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாதி முழுக்க கலகலப்பாக செல்கிறது.

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் விமர்சனம்

இரண்டாம் பாதியில் தான் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் அப்போது தான் பல இடங்களில் விக்ரம் பிரபு ஸ்கோர் செய்கிறார். படத்தில் தேவையில்லாமல் நிறைய காட்சிகள் வைக்காமல் அழகாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.

லவ் மேரேஜ் படத்திற்கு ஷான் கோல்டன் இசை வலுசேர்த்து இருக்கிறது. படத்திற்கு மைனஸ் என்றால் இதுதான் அடுத்து நடக்க உள்ளது என்று யூகிக்கும் வகையில் தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கும் ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக தான் இருக்கிறது.

இறுகப்பற்று, டாணாகாரன் வரிசையில் இந்த படமும் விக்ரம் பிரபுவுக்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ஆக்சன் படங்களே வெளியாகி வரும் நிலையில் இதுபோன்ற குடும்ப படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.