புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சேது படம் போல தூக்கி விடப் போகும் சித்தா..! சாமி ஆடப்போகும் சியான்

vikram sjsurya join the movie arunkumar’s chiyaan 62: சினிமாவில் நடிக்க வேண்டும் என்று  இளைஞர்கள் பல கனவுகளோடு வந்தாலும் கலைக்காக உயிரை துச்சம் என மதித்து பல்வேறு சாகசங்களை துணிந்து செயலாற்றும் நடிகர்கள் ஒரு சிலரே. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகள் பயணித்த போதும் பாலாவின் மூலம் கம்பேக் கொடுக்கப்பட்டு தன்னை நிலை நிறுத்தியவர் தான் சியான் விக்ரம்.

சமீபத்திய கோப்ரா,சாமி 2, மகான் போன்ற படங்கள் கை கொடுக்காது போகவே பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக கோபத்தில் கொந்தளித்ததின் மூலம் ஆறுதலடைந்த விக்ரம் கௌதம் மேனனின் துருவ நட்சத்திர படத்தை மட்டுமே மலை போல் நம்பி இருந்தார் விக்ரம்.

கடந்த ஆண்டு வெளிவர இருந்த திரைப்படம் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் திண்டாடி வருகிறது. பின் பா ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்தில் பிசியாக இருந்தார் விக்ரம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு  காத்திருந்த வேளையில் இயக்குனருக்கு திருப்தி வராது போகவே மீண்டும் மீண்டும் அதை மெருகேற்றி வருகிறார் பா ரஞ்சித்.

Also read: 20 வருடங்களுக்குப் பின் விக்ரம் செய்யும் அதே கதாபாத்திரம்.. தங்கலான் படத்தின் உண்மையை உளறிய சியான்

இந்நிலையில் விக்ரமின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளிவர உள்ளது. கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சித்தா படத்தின் இயக்குனர் எஸ் யு அருண்குமார் உடன் சியான் 62 படத்திற்காக இணைந்துள்ளார் விக்ரம். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் யூ அருண் குமாரின் படைப்புகள் மசாலா கதையாக இல்லாமல் சமூகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சாமானியனின் சத்தமாகவும், மனிதர்களின் உணர்வை தட்டி எழுப்பும் காவியமாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருடன் சீயான் விக்ரம் இணைவது விக்ரமின் கேரியரில் கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

சியான் 62 படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரியா ஷிபு அவர்கள் தயாரிக்க உள்ளார். இசை ஜிவி பிரகாஷ் குமார். கூடுதல் போனஸ் ஆக விக்ரமுடன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இணைய உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி உள்ளது. இந்த மாதம் இனிதே துவங்க உள்ளது சியான் 62 படத்திற்கான படப்பிடிப்பு.

Also read: விஜய்க்கு போட்டியா களமிறங்கும் துருவ் விக்ரம்.. மகனுக்காக அப்பா சியான் 6 மாதமாக செய்யும் தவம்

Trending News