
Vikram: இந்தக் கோடை விடுமுறைக்கு முதல் படமாக விக்ரமின் வீரதீர சூரன் படம் வருகின்ற மார்ச் 27 வெளியாகிறது. சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இப்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சி படு பயங்கரமாக நடந்து வருகிறது. படக்குழு பல்வேறு இடங்களுக்கு சென்று படத்தை பிரமோட் செய்து வருகிறார்கள்.
மேலும் வீர தீர சூரன் படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் வெளியாகிறது எம்புரான். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
எம்புரான் படத்தைப் பற்றி பேசிய விக்ரம்
மலையாளத்தில் மட்டுமல்லாமல் பான் இந்தியா மொழி படமாக மற்ற மொழிகளிலும் எம்புரான் படம் வெளியாகிறது. இதனால் தமிழில் விக்ரம் படத்தின் வசூல் பாதிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து பிரமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பேசியது பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. அதாவது மலையாள சினிமாவில் முதல் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் எம்புரான் சாதனை படைக்கும்.
அப்படிப்பட்ட படத்துடன் தன்னுடைய வீர தீர சூரன் படம் திரைக்கு வர இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபகாலமாக நடிகர்கள் இயக்குனர்களாக மாறி அசத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரித்விராஜ், தனுஷ் போன்ற நடிகர்கள் இயக்குனர்களாக லூசிபர் போன்ற படத்தை எடுத்து பிரமிக்க செய்திருக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் விக்ரம் கூறியிருந்தார்.
தனக்கு போட்டியாக எம்புரான் படம் வெளியானாலும் அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று விக்ரம் சுயநலமின்றி பேசியுள்ளார்.