வீரதீரசூரன் சத்தமே இல்லையே.. இருங்க பாய், சம்பவத்திற்கு தயாராகும் சீயான்

veera dheera sooran
veera dheera sooran

Veera Dheera Sooran: சித்தா புகழ் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வீரதீரசூரன் உருவாகி இருக்கிறது. வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக வர இருக்கும் இப்படத்தின் பார்ட் 2 தான் இப்போது ரிலீஸாக உள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு புதுமை தான்.

ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என படகுழு தெரிவித்துள்ளது. தற்போது படத்தின் பிரமோஷன் மெல்ல ஆரம்பித்துள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த ஆரவாரமும் கிடையாது.

சம்பவத்திற்கு தயாராகும் சீயான்

சத்தம் இல்லாமல் படப்பிடிப்பை முடித்த தயாரிப்பு தரப்பு ப்ரோமோஷன் கூட பெரிய அளவில் செய்யவில்லை. இதற்கு காரணம் படத்தில் இருக்கும் கன்டென்ட் தான்.

அதுவே மக்கள் மத்தியில் பேசும். தனியாக விளம்பரம் தேவையில்லை நிச்சயம் படம் கொண்டாடப்படும் என சினிமா விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.

அந்த அளவுக்கு படத்தின் கதை மட்டுமல்லாமல் விக்ரமின் நடிப்பும் தனித்துவமாக இருக்கிறதாம். நாளை படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் படகுழுவின் பேட்டியும் வைரலாகி வருகிறது.

அதில் படம் தொடர்பான எந்த விஷயமும் கசியவில்லை. அதுவே ஆடியன்ஸை ஆர்வப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பெறும் சம்பவத்திற்கு தயாராகி விட்டார் சீயான்.

Advertisement Amazon Prime Banner