வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1, 2 உள்ளிட்ட திரைப்படங்கள் அண்மையில் ரிலீசானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1000 கோடி வரை வசூலை குவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடித்த த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சோபிதா, விக்ரம் உள்ளிட்ட பலருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் ரசிக்கப்பட்ட காட்சிகளாக அமைந்தது தான் ஆதித்த கரிகாலன், நந்தினியின் காதல், மோதல் காட்சிகள். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்த இந்த கதாபாத்திரங்கள் முதல் பாகத்தில் மோதலுடன் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் காதலுடன் அழகாக மணிரத்னம் காண்பித்திருப்பார்.

Also Read: பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

ஆனால் இந்த காதல் காட்சி காண்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆதித்த கரிகாலனின் மரணம், நந்தினியின் இறுதி முடிவு இருந்தது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு மணிரத்னம் ஏன் இப்படி பண்ணிட்டாரு என புலம்பி தள்ளினர். மேலும் ரசிகர்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அதாவது 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பர். இதில் ஏற்கனவே திருமணமான ஐஸ்வர்யா ராய்யை பழி வாங்கும் விதமாக கடத்தி வரும் விக்ரமுக்கு அவர் மீது ஒருதலையாக காதல் ஏற்படுகிறது. இதனை புரிந்துக்கொள்ளும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பும், விக்ரமின் ஏக்கம், பொறாமை கலந்த நடிப்பும் பெருமளவில் பேசப்பட்டது.

Also Read:  அப்பா உழைப்பில் 10% கூட போடாத துருவ் விக்ரம்.. கழுதை கட்டெறும்பான கதை தான், வீழ்ச்சியில் மார்க்கெட்

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஐஸ்வர்யா ராய் கண் முன்னே விக்ரம் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மலையிலிருந்து கீழே விழுந்து விடுவார். இதில் இவர்களின் கதாபாத்திரங்களான வீரா, ராகினி இருவரும் கடைசி வரை சேர முடியாமல் போய் விட்டார்களே என அப்போதே இப்படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்பி தள்ளினார்.

தற்போது அதே போலவே பொன்னியின் செல்வன் படத்திலும் ஆதித்த கரிகாலனும், நந்தினியும் சேர முடியாமல் போனது ரசிகர்களால் தாங்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக மணிரத்னம் தற்போது விக்ரம், ஐஸ்வர்யா ராயை வைத்து முழுக்க, முழுக்க காதல் கதையாக ஒரு படத்தை இயக்கி ரசிகர்களுக்கு ட்ரீட் தர இருக்கிறார். இதற்காக லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மணிரத்னம், கமல் 235 படத்தை முடித்த கையோடு இப்படத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஐஸ்வர்யா ராய்-க்கு இப்படி ஒரு வெறிபிடித்த காதலரா.? கல்யாணம் இல்லாமல் பிள்ளை பெத்துக்கணும்

Trending News