வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மற்ற நடிகர்களுக்காக சப்போர்ட் பண்ணிய விக்ரம்.. அப்பாஸுக்கும் இவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?

Vikram: விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் போராடி தற்போது தனக்கென்று ஒரு அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டவர் தான் விக்ரம். ஆரம்ப கட்டத்தில் சினிமாவிற்குள் கஷ்டப்பட்டு நுழைந்தாலும் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல், நடித்த படங்கள் வெற்றி பெறாமல் பல தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் அந்த சமயத்தில் கூட சினிமாவில் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறார்.

அப்பொழுது ஒரு பக்கம் ஹீரோவாக முயற்சி எடுத்த நேரத்தில், இன்னொரு பக்கம் மற்ற ஹீரோகளுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக டப்பிங் வாய்ஸ் கொடுத்து உதவி செய்திருக்கிறார். அதாவது இவருடைய குரல் பல நடிகர்களுக்கும் செட்டாகும் என்று இவரை தேடி போய் டப்பிங் பண்ணுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து கேரியரில் இடம் பிடித்திருக்கிறார்.

மற்ற நடிகர்களுக்காக சப்போர்ட் பண்ணிய விக்ரம்

அப்படி இவர் மற்ற நடிகர்களுக்காக 22 படங்களுக்கு சப்போர்ட் பண்ணி டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அவர்கள் யார் என்றால் அஜித், முதன் முதலில் அறிமுகமான அமராவதி மற்றும் பாசமலர்கள் படத்தில் அவருக்காக விக்ரம் தான் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக இவரிடம் இன்னொரு திறமையும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஒரு படத்தில் நடித்த இரண்டு ஹீரோக்கு ஒரே நேரத்தில் வாய்ஸ் மாடுலேஷனில் டப்பிங் பண்ணி இருக்கிறார்.

Also read: இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள்.. விஜய்க்கு டஃப் கொடுக்கும் விக்ரம்

அதை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டும் இருக்கிறார்கள் வெற்றியும் அடைந்திருக்கிறார். அதாவது அப்பாஸ் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த விஐபி படத்தில் இவர்கள் இருவருக்கும் விக்ரம் தான் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கச்சிதமாக பண்ணியிருக்கிறார். அப்படி என்றால் எந்த அளவிற்கு சினிமாவை நேசித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

அதே மாதிரி அப்பாஸ் நடிப்பில் வெளியான காதல் தேசம், ஆசைத்தம்பி, மகிழ்ச்சி, இனி எல்லாமே சுகமே, பூச்சூடவா மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக பிரபுதேவாவுக்கு காதலன் மற்றும் மின்சார கனவு போன்ற இரண்டு படங்களுக்கும் டப்பிங் பண்ணி இருக்கிறார்.

அடுத்து ஜெயராம் நடித்த கடுஞ்சூழ் கல்யாணம் என்ற மலையாள படத்தை தமிழில் டப்பிங் பண்ணும் போது இவருடைய வாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி விக்ரம் தான் டப்பிங் பண்ணி இருக்கிறார். அடுத்ததாக வினித் நடித்த புதிய முகம் மற்றும் ஜாதி மல்லி என்ற படத்திற்கும் டப்பிங் கொடுத்து இருக்கிறார். அடுத்ததாக நடிகர் வெங்கடேஷ் அவருக்கும் தமிழில் டப்பிங் பதிப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்.

Also read: உயிர் போகும் அளவிற்கு உடலை வருத்தி விக்ரம் நடித்த 6 படங்கள்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கோமாவுக்கு போயிருப்பாரு

Trending News