Vikram in Thangalaan: பொதுவாக வெற்றி தோல்வி என்பது ஒருவருக்கு ஏற்ற இறக்கமாக தான் வந்து கொண்டிருக்கும். ஆனால் விக்ரமுக்கு தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் மாதிரியான சூழ்நிலை கடந்த சில வருடங்களாகவே இருக்கிறது. இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமுக்கு மறுபடியும் ஒரு பிளாட்பார்ம் கிடைத்தது.
இதை எப்படியாவது தக்கவைப்பதற்கு அடுத்தடுத்து படத்தை ரிலீஸ் பண்ணி விட்டால் இன்னும் கொஞ்சம் சினிமாவில் நீடிக்கலாம் என்று பல வழிகளில் முயற்சி எடுத்தார். அதற்காக பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வந்த தங்கலான் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று கனவு கண்டார். ஆனால் அவர் கண்ட கனவு வெறும் கனவாக தான் இருக்கிறது வெளிவந்த பாடாக இல்லை.
அதாவது 2022 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணியில் இருந்து தங்கலான் படம் உருவாகி வருகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் படம் எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிற மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
Also read: விஜய்க்கு போட்டியா களமிறங்கும் துருவ் விக்ரம்.. மகனுக்காக அப்பா சியான் 6 மாதமாக செய்யும் தவம்
சின்ன சின்ன பிரச்சினையாக இருந்தால் சமாளித்து விடலாம். ஆனால் படம் எடுப்பதற்கு பணமே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தால் எப்படி தொடர்ந்து இயக்க முடியும் என்று மொத்த பட குழுவும் தலையில் அடித்து புலம்பித் தவிக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்படத்திற்காக போடப்பட்ட பட்ஜெட்டை தாண்டி தற்போது 20 கோடி அதிகரித்துள்ளது.
ஆனாலும் பா ரஞ்சித் இந்த படத்தை கஷ்டப்பட்டாவது வெளிவிட வேண்டும் என்று அவருடைய கைக்காசை போட்டு படத்தை எடுத்து விட்டார். இருந்தாலும் இந்த பெரிய தொகையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தலையில் கட்டி விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் அவரோ போட்ட ரூல்ஸ் படி இதெல்லாம் என்னுடைய கணக்கில் சேராது என்று மொத்தத்திற்கும் நோ சொல்லிவிட்டார்.
இதற்கு அடுத்தபடியாக ஓடிடி தளத்திலேயே இப்படத்தை விற்று விடலாம் என்று மெனக்கீடு செய்தார். ஆனால் அங்கேயும் எதிர்பார்த்து அளவிற்கு போகவில்லை. இது ரஞ்சித்துக்கு மட்டுமில்லை இப்படத்தை நம்பி இருந்த விக்ரமுக்கும் பெரிய இடியாக மாறி இருக்கிறது. இதெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் பா ரஞ்சித் இருக்கிறார்.
Also read: 5 வெறுக்கத்தக்க படங்களைக் கொண்டாடிய சினிமா.. துருவ் விக்ரம் கேரியரை காலி பண்ணிய படம்