விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. இதனால் துவண்டு போயிருந்த அவருக்கு பொன்னியின் செல்வன் புது தெம்பை கொடுத்துள்ளது. தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அந்த திரைப்படம் வசூலிலும் பல சாதனைகள் புரிந்து வருகிறது.
ஒரு கூட்டு முயற்சியாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள நினைத்த அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்திற்காக கடின உழைப்பை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
Also read:கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு
விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கோலார் தங்க வயல் பற்றிய கதை களத்தை கொண்டிருக்கும் அந்த திரைப்படம் மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கு முன்பே இதைப்பற்றி கேஜிஎஃப் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்படாத பல நிகழ்வுகள் இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெளிவாக விளக்கப்பட இருக்கிறது.
இதை ரஞ்சித் பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடன் கைகோர்த்துள்ள விக்ரம் அடிக்கடி இந்த படம் சம்பந்தப்பட்ட கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் இந்த படத்திற்காக தன்னுடைய உடலை கதைக்கேற்றவாறு மாற்றவும் தயாராக இருக்கிறாராம்.
Also read:விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
மேலும் எந்த மாதிரி நான் இருக்க வேண்டும் சொல்லுங்கள், தலைகீழாக மாறி காட்டுகிறேன் என்று அவர் ரொம்பவும் உற்சாகமாக ரஞ்சித்திடம் கூறியிருக்கிறார். அதை எதிர்பார்த்த ரஞ்சித்தும் தற்போது கோலார் தங்க வயலில் கூலி வேலை செய்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார்.
அதை அப்படியே உள்வாங்கி கொண்ட விக்ரம் தற்போது அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். அதனாலேயே படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுவார் என்றும் பட குழுவினர் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
Also read:பா ரஞ்சித்தை நம்பி ஏமாந்த பிரபல இயக்குனர்.. மேடையில் பெருமைக்கு பேசி கழட்டிவிட்ட சோகம்