புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொடர் தோல்வியால் 5 வருடமாக துவண்டு போயிருந்த விக்ரம்.. அஜித்தால் கிடைத்த மறுவாழ்வு

Ajith and Vikram: விக்ரம் மற்றும் அஜித் இரண்டு பேருமே தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஒரு ஒற்றுமை இருக்கிறது.

அதாவது இவர்கள் இருவருமே எந்தவித சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் முழுக்க முழுக்க தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி உடன் போராடி திறமையை வைத்து முன்னுக்கு வந்தவர்கள்.

அதிலும் விக்ரம் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது. இன்னும் சொல்ல போனால் இவருக்கு நடிப்பே வரவில்லை.

இவரெல்லாம் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கடுமையான விமர்சனங்கள் விக்ரம் மீது வீசப்பட்டது. இதனால் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தந்துவிட்டேன் என்னை, காதல் கீதம் மற்றும் மீரா போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

முக்கியமாக மீரா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் விக்ரம் எனக்கு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். அதன் பின் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த உல்லாசம் படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்டரி கொடுத்தார். இதில் அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அஜித் சொன்ன ஒத்த வார்த்தை

ஆனால் அதற்கு முன்னதாக விக்ரம் பல தோல்விகளை பார்த்து துவண்டு போய் மறுபடியும் வந்து இருக்கிறார் என்று அஜித் தெரிந்து கொண்டார். அதனால் இயக்குனரிடம் ஒரே ஒரு வார்த்தையை அஜித் கூறியிருக்கிறார். அதாவது எனக்கு இணையாக அவருக்கும் கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு தான் அஜித் சொன்னபடி இயக்குனர், விக்ரமின் கதாபாத்திரத்தை ஹைலைட் பண்ணி காட்டியிருக்கிறார். அதே மாதிரி இந்த ஒரு படத்தின் மூலம் விக்ரமுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றே சொல்லலாம். இதற்கு பின்னணியில் இருந்து விக்ரமின் கேரியரில் மறுவாழ்வு கொடுத்த பெருமை அனைத்தும் அஜித்தை சாரும்.

இதனை தொடர்ந்து விக்ரம் அவருடைய திறமையை கெட்டியாக பிடித்துக் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Trending News