வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே.. மாஸ் கூட்டணியுடன் அசத்தலாக வெளிவந்த சீயான் 62 வீடியோ

Chiyaan 62 Update: கடந்த சில நாட்களாகவே டாப் ஹீரோக்களின் பட அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும் விக்ரம் இந்த வாரம் முழுவதும் பல சர்ப்ரைஸ்களை கொடுத்து தன்னுடைய ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்து வருகிறார். அதன்படி அவருடைய துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் மிரட்டலாக வெளியாகி இருந்தது.

அதை தொடர்ந்து பா ரஞ்சித் கூட்டணியில் அவர் நடித்து முடித்துள்ள தங்கலான் பட அப்டேட்டும் நேற்று ஆரவாரமாக வெளியாகி இருந்தது. அதில் வரும் ஒன்றாம் தேதி டீசர் வெளியாகும் என்றும் அடுத்த வருட ஜனவரி 26 படம் உலக அளவில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சீயான் 62 பட அப்டேட் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து பலரும் சோசியல் மீடியாவே கதி என கிடந்தனர். அவர்களை எல்லாம் வெறுப்பேற்றும் வகையில் தொழில்நுட்ப கோளாறால் அப்டேட் வராமல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது.

அதைத்தொடர்ந்து வெகுநேர காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக அந்த அப்டேட், வீடியோ வடிவில் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஆரம்பமே அமர்க்களம் என்ற கதையாக செம மாஸ் கூட்டணியுடன் கை கோர்த்திருக்கிறார் சீயான். அந்த வகையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் சமீபத்தில் சித்தா மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அவர்தான் இப்போது விக்ரமுக்கு ஆக்ஷன் சொல்ல இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் ரியா சிபு தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. அதன் ஆரம்பத்திலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் குழந்தையுடன் இரண்டு நபர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வருகிறார்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை விக்ரம் அடிக்கும் மிரட்டலான காட்சி காட்டப்படுகிறது. இப்படி போலீஸ் ஸ்டேஷனையே ரணகளப்படுத்தும் அவர் வேட்டி, சட்டை என சாதாரண ஒரு மனிதராக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Trending News