Famous Tamil Director Interview: ஒரு படத்திற்கு பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. ஆனால் கஷ்டப்பட்டு படத்தை இயக்கிய இயக்குனருக்கு அந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து, மக்களால் கொண்டாடப்படுவதை பார்த்து சந்தோஷப்படுவார்கள்.
ஆனால் தனுஷ், விக்ரம் நடித்த படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ண விடாமல் பிரபல இயக்குனருக்கு தயாரிப்பாளர் அநியாயம் செய்திருக்கிறார். தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் விக்ரமின் மகான் போன்ற இரண்டு படங்களும் மக்களிடம் போய் சேரவில்லை. இந்த ரெண்டு படங்களையும் எடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,
ஜகமே தந்திரம் மற்றும் மகான் போன்ற இரண்டு படங்களையும் எடுத்து முடிக்கும் வரை படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜிடம் எதுவுமே சொல்லவில்லையாம். இந்த படத்தை ஓடிடி-யில் வெளியிடப் போகிறேன் என்பதை அவர் சொல்லாமலே மறைத்துவிட்டாராம்.
Also read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்
இயக்குனராக அவர் எவ்வளவு பேசினாலும் தயாரிப்பாளர் அதை கேட்கவில்லை. இதனால் படத்தின் ஹீரோக்களான தனுஷ் மற்றும் விக்ரமை வைத்து கார்த்திக் சுப்புராஜ் பேசிப் பார்த்தார். ஆனால் அப்படியும் தயாரிப்பாளர் முடியாதென சொல்லிவிட்டார்.
இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் வந்திருந்தால் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு படமும் மக்களிடம் போய் சேரவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமல்ல படத்திற்கும் நல்ல கலெக்ஷன் வந்திருக்கும்.
கடைசியில் தயாரிப்பாளர் தான் நஷ்டப்பட்டு உட்கார்ந்தார். என்னால அதை இன்னும் மறக்கவே முடியல, அதை பற்றி பேசக்கூட விரும்பல என்று வருத்தப்பட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் கூறினார். ஜகமே தந்திரம் படத்தை சசிகாந்த் தயாரித்தார். அதேபோல் மகான் படத்தை எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also read: விஜய்யுடன் மோதியதால் வந்த இடம் தெரியாமல் தடுமாறும் விக்ரம்.. அடிமேல் அடி வாங்கும் பரிதாபம்